யோகி பாபு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய முன்னணி சேனல்!

தர்ம பிரபு என்றால் எம தர்மனின் மகன்.

தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பத்து படங்களில், எட்டு படங்களில் காமெடியனாக நடித்து வருபவர் யோகிபாபு.

இவர் ‘தர்ம பிரபு’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தர்ம பிரபு என்றால் எம தர்மனின் மகன். அரசியல் பகடி களத்தில் உருவாகியிருக்கும் இப்படம் ஜூன் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.

இயக்குநர் முத்துக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி, ரேகா, மொட்டை ராஜேந்திரன், மேக்னா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன்.

இந்நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை தமிழின் முன்னணி தொலைக்காட்சியான சன் டி.வி வாங்கியுள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close