Advertisment

'இதயம் நொறுங்குகிறது; கோபம் வருகிறது..!' கண்ணீர் விடும் ராதிகா சரத்குமார்

தனது சமூக வலைதளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் அந்த வீடியோ குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'இதயம் நொறுங்குகிறது; கோபம் வருகிறது..!' கண்ணீர் விடும் ராதிகா சரத்குமார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மகனை நடு ரோட்டில் படுக்கவைத்த தாயின் பரிதாப நிலை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் உச்சம் பெற்று வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தை நெருங்கியுள்ளது. இனால் நாடு முழுவதும் உள்ள கொரோனா மருத்துவமனைகள் நோயாளிகளின் வருகையால் நிரம்பி வழிகிறது. இதனால் பல மாநிலங்களில் பல்வேறு கட்டப்பாடுகள் இரவு மற்றும் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் வீரியல்அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மருத்துவமனை வசதி இல்லாமலும், அப்படியே மருத்துவமனை வசதிகள் இருந்தாலும், அங்கு மருந்து மற்றும் பெட் வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்திற்கு அளாகி வரும் சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பரிதாபமான இந்த கட்சிகளில் மருத்துவ உதவி கேட்டு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கெஞ்சும் அவல நிலை நமது நெஞ்சை பதறவைக்கிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் சார்தாபென் மருத்துவமனைக்கு வெளியே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கும் அளவுக்கு நெஞ்சை பதறவைக்கிறது.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது மகனை சாலையில் படுக்க வைத்துள்ள ஒரு தாய் மருத்துவமனையில் பெட் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் காத்திருக்கிறார்.

மேலும் 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அந்த மருத்துவமனையில் அனுமதி கிடைக்கும் என்ற விதி உள்ளதாம். ஆனால் அந்த தாய் தன் மகனை ஆம்புலன்ஸில் அழைத்து வராததால் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த  வீடியோவை பார்த்த நடிகை  ராதிகா சரத்குமார் தனது ஆதங்கத்தை ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் பதிவில், இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. கோபம் வருகிறது, அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என தெரிவித்து கண்ணீர் தாரை தாரையாக ஓடும் எமோஜியை போஸ்ட் செய்திருக்கிறார். ராதிகாவின் ட்வீட்டை பார்த்தவர்களோ, வீடியோவை பார்க்க கஷ்டமாக இருக்கிறது. குஜராத் அவர் மாநிலமாச்சே. அங்குமா இந்த அவல நிலை. குஜராத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை. அந்த பையனுக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அனுமதிப்போம் என்பது சுத்த முட்டாள்தனமாக இருக்கிறதே என தெரிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment