Advertisment

காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசன்!

டைட்டில் கார்டில் பாடல்கள் கவியரசர் கண்ணதாசன்  என்ற பெயரைப் பார்க்கும் போதே பாமர ரசிகனும் உள்ளுக்குள் பூரித்துப் போவான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kannadasan Birthday, kavingnar kannadasan

Kannadasan Birthday, kavingnar kannadasan

தமிழ் சினிமா பாடல்களில் கவியரசர் கண்ணதாசனின் பங்கு அளப்பரியது. இன்றைக்கு வரும் திரைப்படங்களில் 3, 2, 1 ஏன் பாடல்களே இல்லாமல் கூட படம் வரத் தொடங்கிவிட்டது.

Advertisment

ஆனால் பாடல்களுக்காக தியேட்டரை நாடி ஓடிச் சென்றவர்களையும் இந்தத் தமிழ் சினிமா கண்டிருக்கிறது. டைட்டில் கார்டில் பாடல்கள் கவியரசர் கண்ணதாசன்  என்ற பெயரைப் பார்க்கும் போதே பாமர ரசிகனும் உள்ளுக்குள் பூரித்துப் போவான். உலகத் தத்துவத்தை எல்லாம் தனது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல், வலி தெரியாமல் நமக்கு உணர்த்தியவர் அவர்.

காதல், சோகம், உற்சாகம், குதூகலம், வருத்தம் என மனிதனின் அத்தனை உனர்வுகளையும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தனது பாடல்களில் பதிவு செய்தவர். பலரின் புண்பட்ட மனங்களுக்கு அவரது பாடல்களே அறுதல்!

இன்று அவருக்கு 93-வது பிறந்தநாள். ஆகையால் அவரின் சில பொன்மொழிகளை இங்கே குறிப்பிடுகிறோம்.

”நீ வெற்றிக்காக போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள்,நீ வெற்றி பெற்றப்பின் விடாமுயற்சி என்பார்கள்!”

”ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” என்ற பாடலில் இப்படி சொல்லியிருப்பார்,

”ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி!

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...!

வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்

எல்லா நன்மையும் உண்டாகும்!!!”

”நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி!”

”அப்போதுதான் அவள் கூந்தலைப் பார்த்தேன். ஒரு கவிஞனுடைய ரசனைக்கு எவ்வளவு நீளமான கூந்தல் வேண்டுமோ அவ்வளவு நீளம் இருந்தது.”

”தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”

”தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது”

இது போல் பல தத்துவங்கள் கவியரசரின் பாடல்களில் பொதிந்திருக்கும்!

Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment