Advertisment

டிஜிட்டலில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’- அடுத்து கைதி, பிகில்?

Namma Veetu Pillai vs Tamilrockers: அண்மையில் வெளியான இந்த வெற்றிப் படங்கள் அத்தனையையும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Namma Veetu Pillai Full Movie Download, Namma Veetu Pillai Full Movie Download TamilRockers, நம்ம வீட்டுப் பிள்ளை, நம்ம வீட்டுப் பிள்ளை ஃபுல் மூவி, சிவகார்த்திகேயன்

Namma Veetu Pillai Full Movie Download, Namma Veetu Pillai Full Movie Download TamilRockers, நம்ம வீட்டுப் பிள்ளை, நம்ம வீட்டுப் பிள்ளை ஃபுல் மூவி, சிவகார்த்திகேயன்

Tamil Movie Namma Veetu Pillai: பெரிய திரையில் அக்டோபரில் கொண்டாடிய அத்தனைப் படங்களையும், நவம்பரில் திரையில் பார்க்கலாம். தமிழ் ராக்கர்ஸில் இல்லைங்க... அதிகாரபூர்வமாக டிஜிட்டல் உரிமை பெற்று வெளியிடுகிறார்கள்.

Advertisment

அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை நவம்பர் 15-ம் தேதி சன் நெக்ஸ்ட்-ல் வெளியாகிறது. செப்டம்பர் 27-ம் தேதி வெள்ளித் திரையைத் தொட்ட நம்ம வீட்டுப் பிள்ளை, 50-ம் நாளில் டிஜிட்டலில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

நம்ம வீட்டுப் பிள்ளை படம் தயாரிப்பும், சன் பிக்சர்ஸ் என்பதால் சன் நெக்ஸ்ட்-ல் வெளியாவதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு பிறகு அசுரன், கைதி, பிகில் என பிளாக் பஸ்டர் படங்கள் வெளியானாலும், இவற்றில் ஃபேமிலி எண்டர்டெயினராக அமைந்தது நம்ம வீட்டுப் பிள்ளைதான். எனவே அதற்கான ரசிகர்கள் கூட்டத்திற்கு குறையே இல்லை.

அசுரன் ஓரிரு வாரங்களுக்கு முன்பே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது குறிப்பிடத்தக்கது. கைதி படம் இந்த மாதம் இறுதியில் டிஜிட்டலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படம் டிஜிட்டலில் வெளியாவது பற்றிய அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அண்மையில் வெளியான இந்த வெற்றிப் படங்கள் அத்தனையையும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதையும் மீறி இந்தப் படங்கள் வசூலில் வெற்றி பெற்றன. டிஜிட்டலில் அவற்றைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாகவே இருக்கிறார்கள்.

 

Tamil Cinema Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment