Advertisment

புரட்சிப் பெண்ணாக சீறிவரும் பொம்மி: கலர்ஸ் தமிழ் புதிய சீரியல்

Tamil Serial Update : கலர்ஸ் தொலைக்காட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் பொம்மி பி.ஏ.பி.எல் என்ற பெயரில் புதிய சீரியல் வர உளளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புரட்சிப் பெண்ணாக சீறிவரும் பொம்மி: கலர்ஸ் தமிழ் புதிய சீரியல்

Colors TV New Serial Bommi B.A.B.L : நாட்டில் தொலைக்காட்சி சீரியலுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. திரைப்படங்களை விட பலரும் தற்போது சீரியலுக்கே அதிக முன்னுரிமை அளித்து வருகின்றனர். மேலும் மக்களின் ரசனைக்கேற்ப தொலைக்காட்சி புதிய சீரியல்களும் அரங்கேறி வருகிறது. இதனால் சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் அனைத்து சீரியல்களும் ஒரே கருவை அடிப்படையாக வைத்து வெளியானாலும் சீல சீரியல்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.

Advertisment

அந்த வகையில் மக்களிம் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல், பரிஸ்டர் பாபு. கலர்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மக்களின் மனதில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றே கூறலாம். இதுவரை எந்த சீரியலிலும் சொல்லப்பாடாத கருத்தான சிறார் திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண்கள் மறுமணம் உள்ளிட்ட பல வன்கொடுமைகளை உள்ளடக்கிய பதிவு தான் இந்த சீரியல். சமூகத்தால் ஒடுக்கப்பட்ட விதவை பெண் தன் சார்ந்த பல பெண்களின் உரிமைக்காக போராடும்  வகையில் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்படாத விதியாக இருந்த இந்த பெண்களுக்கு எதிரான சட்டங்களை ஒரு சிலரே எதிர்த்து போராடியுள்ளதாக வரலாறு கூறுகிறது. படிக்க வேண்டிய சிறுமிகளை வயதானவருக்கு திருணம் செய்து வைத்து அவர்கள் தங்களின் நிலையை உணரும்போது விதவை என்ற அடையாளத்தை கொடுத்து வீட்டில் ஒரு கைதியாக அடைப்பட்டு கிடக்கும் பல பெண்களின் வாழ்விலை அடிப்படையான கொண்ட இந்த சீரியல் தற்போது தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.  வரும் மே 3-ந் தேதி முதல் இந்த சீரியல் பொம்மி பி.ஏ.பி.எல் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.

பெண்கள் மீதான இந்த கொடுமைகளை எதிர்த்து ஒரு சிலர் நடத்திய போராட்டத்திற்கு பலனாகவே  பெண்களுக்கு எதிரான பல மூட பழக்கவழக்கங்களுக்கு இன்றைய அளவில் தீர்வு கிடைத்திருக்கிறது என்றே கூறலாம். இந்த சீரியலில், 60 வயதான ஒருவரை திருமணம் செய்துகொண்ட 8 வயது சிறுமிக்கு நடக்கும் இரண்டாம் திருமணம் அவள் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களே இந்த சீரியலின் முழு கதையாக உள்ளது.

இதில் விதவையான அந்த சிறுமியை அனிருத் என்ற வழக்கறிஞர் திருமணம் செய்துகொள்கிறார். தொடர்ந்து பொம்மியின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கும் அனிருத், அவளை வழக்கறிஞராக்குறார். தான் பெற்ற கல்வியின் மூலமாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தையும் தன்னை போன்ற பெண்களின் வாழ்க்கை உரிமைகளுக்காகவும் பொம்மி போராடிய கதை தான், `பொம்மி பி.ஏ.பி.எல். இன்றளவிலும் மூடநம்பிக்கைகளால் மூழ்கிக் கிடக்கும் பலரிடத்தில் பொம்மியின் கேள்விகளும் அவளின் அழகான வாழ்க்கைப் பயணமும் அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Colors Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment