Advertisment

கடுகு போட்டாத்தான் கலவரம் வெடிக்கும்... பிக்பாஸ் ப்ரமோவில் வறுத்தெடுக்கும் கமல்

Tamil Reality Show : கமல்ஹாசன் சமையல் கலைஞராக வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 2-வது ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது

author-image
WebDesk
New Update
கடுகு போட்டாத்தான் கலவரம் வெடிக்கும்... பிக்பாஸ் ப்ரமோவில் வறுத்தெடுக்கும் கமல்

Biggboss Season 5 Promo Update : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும ஏற்படுத்தியுள்ள ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி பிக்பாஸ் சீசன் 5-ன் முதல் ப்ரமோ வெளியிடப்பட்டது. இதில் கல்யாண வீட்டில் இருக்கும் கமல்ஹாசன் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். முதலில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் ஒற்றுமையாக இருந்து திருமணத்தை நடத்தி வரும்போது, ஒருவர் மாப்பிள்ளை பற்றி புரளி பேசுகிறார். அதில் வெடிக்கிறது சண்டை. இறுதியில் மாப்பிள்ளை பெண் இருவரையும் பிரித்து விடுகின்றனர்.

அப்போது ப்ரீஸ் என்று சொல்லிக்கொண்டு வரும் கமல்ஹாசன், ஆயிரம் பொருத்தம் பார்த்து செய்யும் கல்யாண வீட்டிலேயே இவ்வளவு கலாட்ட இருக்கத்தான் செய்கிறது. இங்கேயே இப்படினா என்று சொல்ல ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சீசன் 5 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ன் 2-வது ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. முதலில் கல்யாண வீட்டில் இருந்த கமல்ஹாசன் இப்போது சமையல் கலைஞராக மாறியுள்ளார். இதில் அடுப்பில் கடாய் வைக்கும் அவர் முதலில் பாத்திரம் காய வேண்டும். அப்புறம் எண்ணெய்... அதுவரைக்கும் எல்லாம் அமைதியா இருக்கும்... அதுல கொஞ்சம் கடுக போட்ட உடனே பொறிய ஆரம்பிக்கும் பாருங்க... சடசடனு பொறியும் சுறு சுறுனு வதங்கும்... சலசலனு கொதிக்கும்.. கருகருனு தீயும்... பட்டுனு ஆவி அடிக்கும் சட்டுனு பொங்கும் தாளிச்சி கொட்டி இறக்கி வைக்கிற வரைக்கும் ஒரே கலவரம்தான் போங்க... என்று சொல்கிறார்.

அதன்பிறகு நான் சமையலை பற்றி பேசிக்கெண்டிருக்கிறேன்... நீங்க என்ன நினைத்தீர்கள்... எப்பா இந்த வீட்ல சுதந்திரமா எதையுமே பேச முடியாது போல இருக்கு என்று சொல்ல பிக்பாஸ் சீசன் 5 என்று டைட்டில் வருகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு ப்ரமோவை எதிர்பார்க்கவே இல்லை என்று பாராட்டி வருகின்றனர். தற்போது இந்த ப்ரமோ ரசிகர்கள மத்தியில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment