மதுரை முத்து… பவித்ரா லட்சுமி… அட, யாருப்பா எலிமினேஷன்?

Vijay TV Reality Show : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Reality Show Cook With Comali : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தயில் எப்போதும் பெரும் வரவேற்பு இருக்கும். அதிலும் காமெடி ஷோக்களுக்கு தனி மவுசுதான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. காமெடியுடன் சமையல் செய்யும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் செய்யும் சேட்டைகளை ரசிப்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு  கிடைத்த  வரவேற்பை தொடர்ந்து தற்போது 2-வது சீசன ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீசனில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். மேலும் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துகொண்டு செய்யும் சேட்டைகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.  

இந்நிலையில், வாரந்தோறும் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம்.  அந்த வகையில் ஏற்கனவே மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்ட நிலையில், மற்ற 5 பேரும் போட்டியில் இருக்கிறார்கள். இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வார நிகழ்ச்சிக்காக ப்ரோமோவில், பவித்ராவுக்கும். அஸ்வினுக்கும் கடினமான போட்டி நிலவியது. இதனால் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் உருவானது. இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் பவித்ரா வெளியேறுவதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil reality show cook with comali eliminated candidate

Next Story
செம்ம ஹேப்பி வனிதா: முக்கிய நடிகருடன் அடுத்த படம்Tamil cinema news in tamil bigboss fame vanitha vijayakumar’s next film with actor prasanth
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express