Advertisment

ஃபைனல் இப்போ இல்லை: குக் வித் கோமாளியில் வேற லெவல் Fun!

Tamil Reality Show : ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
ஃபைனல் இப்போ இல்லை: குக் வித் கோமாளியில் வேற லெவல் Fun!

Tamil Reality Show Cook With Comali Final postponed: விஜய் டிவியின் புகழ்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி தள்ளிப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரபரபாகும் இந்த நிகழ்ச்சி முதல் சீசன் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்நிகழ்ச்சியின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சமையலர்களாக போட்டியாளர்களும், கோமாளிகளாக வரும் நகைச்சுவை கலைஞர்களும் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

தற்போது 2-வது சீசனும் முடிவுக்கு வரவுள்ள நிலையில், கடந்த வராம் நடைபெற்ற அரையிறுதி போட்டியில், அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகியோர் நேரடியாகவும், ஷகீலா மற்றும் பவித்ரா ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரி ஆகவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசனுக்கான இறுதிப்போட்டி வரும் வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் திடீரென மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி இந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து தற்போது வெளிவந்திருக்கும் ப்ரொமோவில், இதற்கு முன் எலிமினேட் ஆன போட்டியாளர்களும் இதில் பங்கேற்று இருக்கிறார்கள். இதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் இந்த வாரம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சி முடிவடைவதை நாங்கள் விரும்பவில்லை என்று ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பைனல் போட்டி தள்ளிப்போய் இருப்பது பற்றி ரசிகர்கள் தற்போது கமெண்டில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cook With Comali Tamil Reality Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment