Advertisment

துறுதுறு பள்ளிச் சிறுமியாக... இந்த குக் வித் கோமாளி பிரபலத்தை அடையாளம் தெரிகிறதா?

Tamil Reality Show : சிவாங்கி பள்ளி பருவத்தில் தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

author-image
WebDesk
New Update
துறுதுறு பள்ளிச் சிறுமியாக... இந்த குக் வித் கோமாளி பிரபலத்தை அடையாளம் தெரிகிறதா?

Tamil Reality Show Cook With Comali : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அத்துனை தமிழ் மக்களின் அன்பை கவர்ந்த சிவாங்கி, தனது பள்ளி நாட்களில் எடுத்துக் கொண்ட போட்டோவை இணையத்தில் வெளியிட்டார்.

Advertisment

விஜய்டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சிவாங்கி. தனது இனிமையாக குரலின் மூலம் பல ரசிகர்களை பெற்ற இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காமெடியில் கலக்கி வருகிறார். இதில் சிவாங்கி, அஸ்வின் மற்றும் புகழுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளன. வாரத்தின் இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், கோமாளிகளாக கலந்து கொள்பவர்கள் பல வேடங்களில் கட்சியளிப்பது வழக்கம்.

publive-image

அந்த வகையில் கடந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சிவாங்கி பள்ளி மாணவி போன்று வேடமிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த கெட்டப் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிகை சமந்தாவை நினைவூட்டும் வகையில் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது சிவாங்கியின் நிஜமான பள்ளிப்பருவத்து போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சிவாங்கி, தனது போட்போக்கள் மற்றும் வெளியில் செல்லுமபோது எடுக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோசெய்பவர்கள் எண்ணிக்கை 2.2 மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சிவாங்கி தற்போது தனது பள்ளி பருவத்தில் தனது தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை வாரிகுவித்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Cook With Comali Shavangi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment