Advertisment

உனக்காக என்ன வேணா செய்வேன்.. என்னை ஏத்துக்கோ... டி.ஜே.பிளாக்-காக கண்ணீர் விட்ட ரோஜாஸ்ரீ

விஜய் டிவியின் ஹம் சொல்றீயா ஷூம் சொல்றீயா நிகழ்ச்சியின் மூலம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருபவர் ரோஜாஸ்ரீ

author-image
WebDesk
New Update
உனக்காக என்ன வேணா செய்வேன்.. என்னை ஏத்துக்கோ... டி.ஜே.பிளாக்-காக கண்ணீர் விட்ட ரோஜாஸ்ரீ

விஜய் டிவியின் ஹம் சொல்றீயா ஷூம் சொல்றீயா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரோஜாஸ்ரீ டிஜே பிளாக் குறித்து பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

புதிய நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதில் விஜய் டிவிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொடங்கி, ஸ்டார்ட் மியூசிக் வரை பல நிகழ்ச்சிகளை ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. வாரம் முழுவதும் சீரியல் வர இறுதியில் ரியாலிட்டி ஷோக்கள் என டிஆர்பி ரேட்டிங்கை உச்சத்தில் கொண்டு செல்கிறது.

அந்த வகையில் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ஹம் சொல்றீயா ஷூம் சொல்றீயா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்நிகழ்ச்சியின் மூலம் தற்போது வைரலாக பேசப்பட்டு வருபவர் ரோஜாஸ்ரீ. திருச்சியை சேர்ந்த இவர், இந்நிகழ்ச்சியில் டிஜே பிளாக்குடன் இணைந்து செய்த ஃபர்பாமன்ஸ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சி குறித்து தற்போது பிரபல யூடியூப் சேனல் பிகைண்ட்வுட்ஸ்க்கு பேட்டி அளித்துள்ள ரோஜாஸ்ரீ, இந்நிகழ்ச்சியில் நடந்த அனைத்துமே எதார்த்தமாக முன்கூட்டியி எதுவும் ப்ளான் இல்லாமல் நடந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் இவ்வளவு பேசப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது எல்லாமே நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் வீடியோவை நிறைபேர் எடுத்து கட் பண்ணி சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியீடுகின்றனர். அதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. நானே பலமுறை இது போன்ற வீடியோவை பார்த்து இருக்கிறேன். இன்னமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். எல்லா வீடியோவுக்கும் வியூஸ்சும் அதிகமாகத்தான் இருக்கிறது.

எத்தனை முறை நமது வீடியோவை கட் செய்து போட்டாலும் மக்கள் பார்க்குறது என்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்கள் என்னை ஏத்துக்கிட்டாங்கனு ரொம்பே ஹேப்பியா இருந்துச்சு. அந்த மக்களோட மக்களா நானும் ஒரு ஆளாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதேபோல் நிகழ்ச்சியின் முடிவில், நீங்கள் ஒருவரிடம் (டிஜே பிளாக்) காதலை சொல்லி அவர் ஏற்கவில்லை என்றால் எப்படி பேசுவீர்கள் என்று நடித்து காட்டி சொன்னபோது, அற்புதமாக நடித்து காண்பித்துள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment