Advertisment

Vijay TV CWC Final Highlights: டைட்டில் வின்னர் கனிக்கு ரூ5 லட்சம் பரிசு

Tamil Reality Show Live : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி சுற்றின் சுவாரஸ்யமான அப்டே்களை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Vijay TV CWC Final Highlights: டைட்டில் வின்னர் கனிக்கு ரூ5 லட்சம் பரிசு

Tamil Reality Show Cook With Comali : தமிழகத்தில் ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் காமெடியுடன் வரும் கலக்கலான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைஅனைவரிடமும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரபரப்பாகி வரும் இந்த ரியாலிட்டி ஷோக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம. மேலும் 2019-ம் ஆண்டு ஒளிபரப்பான முதல் சீசனில், வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், ரம்யா பாண்டியன், ரேகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் சாம்பியன் பட்டம் வென்றார்.

Advertisment

தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில், அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, பவித்ரா லட்சுமி, ஷகீலா, மதுரை முத்து உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் கோமாளிகளாக பாலா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, புகழ், ஷிவாங்கி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். இதில் ஷிவாங்கி மற்றும் புகழ் இருவரும் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டைகர் தங்கதுரையின் ஜோக்குகள் சக நடிகர்களையே கலாய்க்கும் அளவுக்கு உள்ளது.

தொடர்ந்து இந்த நிகழச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த மாத தொடக்கத்தில் இந்நிகழ்ச்சியின் அரையிறுதி சுற்றுகள் நடைபெற்றது. இதில் அஸ்வின் கனி, பாபா பாஸ்கர், ஆகிய மூவரும் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பவித்லா லட்சுமி, ஷகீலா இருவரும் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் இதை விரைவில் முடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் கடந்த 2 வாரங்களாக புதிய முயற்சிகள் ஒளிபரப்பாகியது.

இதனையடுத்து இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தமிழ் புத்தாண்டு தினமான இன்று நடைபெறுகிறது.  இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:48 (IST) 14 Apr 2021
    குக் வித் கோமாளி சீசன் 2 : சாம்பியன் பட்டம் வென்ற கனி

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் நடைபெற்ற 3 ரவுண்டுகளில் அதிக புள்ளிகள் பெற்ற கனி சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு 5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:35 (IST) 14 Apr 2021
    குக் வித் கோமாளி விருதுகள் அறிவிப்பு

    கொஞ்சம் தமிழ் விருது - சுனிதா

    எனர்ஜிடிக் பார்சன் விருது - பாபா பாஸ்கர்

    திடீர் கோமாளி விருது - தங்கதுரை

    வொண்டர் உமன் விருது - கனி

    டெர்மினேட்டர் விருது - பவித்ரா லட்சுமி

    கண்டன்ட் குயின் விருது - மணிமேகலை

    சைலண்ட் கில்லர் விருது - ரித்திகா

    ஏஞ்சல் ஆஃப் குக் வித் கோமாளி - ஷகீலா

    டாம் இன் குக் விருது - தர்ஷா

    கவுண்டர் கிங் விருது - பாலா

    காமெடி ஐகான் விருது - மதுரை முத்து

    எங்கவீட்டுப்பிள்ளை விருது - சிவாங்கி

    எக்ஸ்பிரஸ் இன் கிங் விருது - புகழ்

    டார்லிங் ஆப் குக் வித் கோமாளி - ரக்ஷன்



  • 19:22 (IST) 14 Apr 2021
    குக் வித் கோமாளி விருதுகள் அறிவிப்பு

    கொஞ்சம் தமிழ் விருது - சுனிதா

    எனர்ஜிடிக் பார்சன் விருது - பாபா பாஸ்கர்

    திடீர் கோமாளி விருது - தங்கதுரை

    வொண்டர் உமன் விருது - கனி

    டெர்மினேட்டர் விருது - பவித்ரா லட்சுமி

    கண்டன்ட் குயின் விருது - மணிமேகலை

    சைலண்ட் கில்லர் விருது - ரித்திகா

    ஏஞ்சல் ஆஃப் குக் வித் கோமாளி - ஷகீலா

    டாம் இன் குக் விருது - தர்ஷா

    கவுண்டர் கிங் விருது - பாலா

    காமெடி ஐகான் விருது - மதுரை முத்து

    எங்கவீட்டுப்பிள்ளை விருது - சிவாங்கி

    எக்ஸ்பிரஸ் இன் கிங் விருது - புகழ்

    டார்லிங் ஆப் குக் வித் கோமாளி - ரக்ஷன்



  • 18:53 (IST) 14 Apr 2021
    சிம்புவை வெளியேற்றிய டைகர் தங்கதுரை

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது இறுதிச்சுற்று ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதில் முதல் ரவுண்டின் முடிவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எண்ட்ரி கொடுத்தார். அப்போது அவரிடம் தான் ஒரு ஜோக் சொல்வதாக டைகர் தங்கதுரை கூறியபோது ரஹ்மான் பாய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். தொடர்ந்து 3-வது சுற்றில் எண்ட்ரி கொடுத்த நடிகர் சிம்பு கலகலப்பாக உரையாடிய நிலையில், அவரிடமும் தங்கதுரை ஜோக் சொல்ல முயன்றார். ஆனால் அவரை கண்ட நடிகர் சிம்பு தெறித்து ஓடிவிட்டார்



  • 17:58 (IST) 14 Apr 2021
    எண்ட்ரி கொடுத்த சிம்பு

    ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு தற்போது எண்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே வீடியோ காலிங் மூலமாக ஏ.ஆர்.ரஹ்மான், நேரடியாக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், 3-வது சுற்றுக்கு தற்போது சிம்பு எண்ட்ரி கொடுத்துள்ளார்.



  • 17:54 (IST) 14 Apr 2021
    2 ரவுண்ட் முடிவில் கனி முதலிடம்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சுற்றின் 2-வது ரவுண்டில், 40 க்கு 35 மார்க் எடுத்த கனி மொத்தம் 70 க்கு 55 மார்க் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். தற்போது 3-வது ரவுண்ட் நடைபெறவுள்ளது.



  • 17:17 (IST) 14 Apr 2021
    எண்ட்ரி கொடுத்த சந்தோஷ் நாராயணன்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இணைந்துள்ளார்



  • 16:31 (IST) 14 Apr 2021
    எண்ட்ரி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வீடியோ காலிங்கில் இணைந்துள்ளார். அதில் தான் கதை எழுதியுள்ள 99 படம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.



  • 16:17 (IST) 14 Apr 2021
    தொடங்கியது 2-வது சுற்று

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 30 மதிப்பெண்களுக்கான முதல் சுற்று முடிவடைந்து தற்போது 2-வது சுற்று தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் 29 மதிப்பெண்கள் பெற்று அஸ்வின் முதலிடம் பிடித்தார்.



  • 15:23 (IST) 14 Apr 2021
    சிங்கம் மாஸ்க் அணியும் குக் மற்றும் கோமாளிகள்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சமையல் டாஸ்க் தொடங்கியுள்ள நிலையில், 50 நிமிடங்கள் சமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் 10 நிமிடங்கள் குக்குகளும், அடுத்த 10 நிமிடங்கள் கோமாளிகளும் சிங்கம் மாஸ்க் அணிய வேண்டும் என்று டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 40 நிமிடங்கள் வரை அது தொடர்ந்து நடைபெறும் என்றும் கடைசி 10 நிமிடங்கள் இருவரும் சேர்ந்து சமைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.



  • 15:14 (IST) 14 Apr 2021
    காய்கறிகள் வரையும் கோமாளிகள்

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் வரையும் காய்கறிகள் வரைபடத்தில் இருந்து ஒரு காய் தேர்வு செய்து குக்-கள் சமைக்க வேண்டும் என்று டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து கோமாளிகளும் காய்கறிகள் வரைவதில் தீவிரமாகியள்ளனர்.



  • 15:12 (IST) 14 Apr 2021
    குக் வித் கோமாளி - குக்குகளுக்கு கோமாளிகள் ரெடி

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்று வரும் நிலையில், இதில் பாபா பாஸ்கருக்கு பாலாவும், கனிக்கு ஷிவாங்கியும், அஷ்வின்க்கு மணிமேகலையும், ஷலீலாவுக்கு சுனிதாவும், பவித்ராவுக்கு புகழும் கோமாளிகளாக தேர்வாகியுள்ளனர்.



Cook With Comali Tamil Reality Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment