சீரியல் ஷூட்டிங் ரொமான்ஸ் வீடியோ: அர்ஜுன் கையில் ரோஜா கிள்ளுனதை நோட் பண்ணுனீங்களா?

Tamil Serial Update : படப்பிடிப்பு தளத்தில் ரோஜா சீரியல் நாயகி நாயகனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Serial Roja And Arjun Viral Video : ரோஜா சீரியல் படப்பிடிப்பு இடத்தில் நாயகி ரோஜா – அர்ஜூன் இடையேயான சொதப்பல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி சீரியலுக்கு தமிழக மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் சில சீரியல்கள் திரைப்படங்களுக்கு இணையாக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அந்த வகையில், சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்துள்ளது. பிரியங்கா நல்காரி, சுப்பு சூரியன் ஆகியார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும்  இந்த சீரியலில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த வடிவுக்கரசி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலில், நாயகி பிரியங்கா நாயகன் சூரியன் ஆகியோருக்கு இடையேயான ரொமான்ஸ் கட்சிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளங்களே உள்ளது. மேலும் வாரங்தோறும் வெளியாக்கும் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் ரோஜா சீரியல் அதிக புள்ளிகள் பெற்றுவருகிறது. இந்த சீரியல் குறித்து வலைதளங்களில் வெளியாகும் தகவல்களுக்கும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது ரோஜா சீரியல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், படப்பிடிப்பு தளத்தில், ரோஜா சீரியலின் நாயகி பிரியங்கா நல்காரி மற்றும் நாயகன் சுப்பு சூரியன் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது இவர்கள் இருவரும் சொதப்பிய காட்சிகள் அடங்கிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil roja serial update arjun and roja romance in shooting spot

Next Story
பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘செட்’டில் என்ன ஜாலி பாருங்க… நடிகரின் சமையலை நடிகைகள் ருசித்த வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com