Advertisment

சீதாவை வெளியேற்றும் ராம்? சந்தோஷத்தில் மகா : சீதா ராமன் சீரியல் அப்டேட்

நாங்கள் மதுமிதாவைதான் பெண் கேட்டு வந்தோம் ஆனால் நீங்கள் ஏமாற்றி சீதாவை கட்டி வைத்துவிட்டீர்கள்.

author-image
WebDesk
New Update
Priyanka Seetha raman

சீதாராமன் சீரியல் பிரியங்கா நல்காரி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சீதா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

பிரியங்கா நல்காரி நாயகியாக நடித்து வரும் சீதா ராமன் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் சீதா கொண்டு வந்த பேக்கில் கஞ்சா இருப்பதாக சூர்யா சொல்ல அதை கேட்டு மதுமிதா ராம் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், மகாலட்சுமியில் வீட்டக்கு வரும் ராஜசேகர் மகாலட்சுமியிடம் சத்தம் போடுகிறார்.

அதை கேட்டு மகாலட்சுமி சீதா எல்லாத்தையும் சொல்லிவிட்டாளா அதுவும் நல்லதுக்குதான் என்று ஆவேசமாக பேசி முதலில் தப்பு செய்தது நீங்கள் தான். நாங்கள் மதுமிதாவைதான் பெண் கேட்டு வந்தோம் ஆனால் நீங்கள் ஏமாற்றி சீதாவை கட்டி வைத்துவிட்டீர்கள். அதை கேட்டு ராஜசேகர், சீதா சீதா இனிமேல் நீ இங்க இருக்க வேணாம் இவங்க எல்லாரும் கெட்டவங்க என சொல்லி வீட்டுக்கு அழைக்கிறார். ஆனால்  சீதா வர மறுக்கிறாள்.

அதே சமயம் சீதா கொண்டு வந்த பையில் கஞ்சா இருப்பதாக சூர்யா சொன்னதை ராம் சொல்கிறார். இதை கேட்டு ராஜசேகர் அது சீதா வைத்தது அல்ல எங்க சித்தி மகா வைத்தது என்று சொல்ல, கோபப்படும் ராம் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறான். அதன்பிறகு வீட்டுக்கு வரும் ராம் சீதாவிடம் கோபப்பட்டு ரூமில் இருக்கும் பொருட்களை தூக்கிப்போட்டு உடைக்கிறான்.

இதை கேட்டு அழுது புலம்பும் சீதா, நான் அப்படி செஞ்சி இருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா பாஸ்? நானே எப்படி என் அக்கா வாழ்க்கையை கெடுப்பேன்? உங்களுக்கு நான் தான் செய்தேனு சந்தேகம் இருந்தால் என்னை போலீஸ்ல பிடிச்சு கொடுங்க என சொல்ல, ராம் கோபமாக மகாவிடம் சென்று போலீசை கூப்பிட சொல்கிறான். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment