Advertisment

நானும் ஒரு வன்னியர் தான்... சூர்யாவுக்கு சல்யூட்... சீரியல் பிரபலம் வெளியிட்ட வீடியோ

Tamil Cinema Update : ஜெய்பீம் படத்தின் கதையை உணராமல் சில இடத்தில் வந்த காட்சிகளை வைத்து வன்னியர் சமூகத்தினர் போராட்டம் நடத்துவது தேவையில்லாத ஒன்று

author-image
WebDesk
New Update
நானும் ஒரு வன்னியர் தான்... சூர்யாவுக்கு சல்யூட்... சீரியல் பிரபலம் வெளியிட்ட வீடியோ

Tamil Cinema Jai Bhim Issue Update : சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். பழங்குயின மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடி்பபடையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Advertisment

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சூர்யாவிற்கு ஆதரவாகவும எதிராகவும பல கருத்தக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதனால் திரைத்துறை மட்டுமல்லது தமிழக அரசியலிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சூர்யா 5 கோடி நஷ்டஈடு மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் சில அரசியல் நிர்வாகிகள் அறிவித்திருந்தார்கள்.

இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், நானும் வன்னியர் தான் ஆனால், நான் சூர்யாவிற்கு தான் ஆதரவு அளிப்பேன் என்று பிரபல சீரியல் நடிகர் அருண்குமார் ராஜன் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், உண்மையிலேயே ஜெய் பீம் படம் கொடுத்ததற்கு சூர்யா சாருக்கு நான் ரொம்ப நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது வரையுமே இவர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா? என்பது எனக்கு தெரியவே தெரியாது. ஜெய்பீம் படத்திற்கு பின்பு தான் இவர்களுடைய சூழ்நிலையை உணர்ந்தேன். இந்த உலகில் உள்ள எல்லோரும் சமமானவர்கள்.

இருளர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதை ஜெய்பீம் படத்தில் சூர்யா சார் அழகாக சொல்லி இருந்தார். ஆனால், படத்தின் கதையை உணராமல் சில இடத்தில் வந்த காட்சிகளை வைத்து வன்னியர் சமூகத்தினர் போராட்டம் நடத்துவது தேவையில்லாத ஒன்று. இதுவரை நான் எந்த இடத்திலுமே பதிவு பண்ணியதில்லை. இந்த இடத்தில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். அது என்னவென்றால், நானும் ஒரு வன்னியர் தான். ஆனால், வன்னியர் ஆக இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு எந்த ஒரு தவறும் தெரியவில்லை.

நான் சூர்யா சாருக்கு சல்யூட் அடிக்கிறேன். இந்த படத்தில் அவர் எந்த ஒரு சமூகத்தினரையும் இழிவுபடுத்துவம் நோக்கில் நடிக்கவில்லை. ஆனால், ஒரு சில பேர் படத்தின் கருத்தையும் ஆழத்தையும் புரியாமல் தேவையில்லாமல் ஜாதிக் கலவரமாக மாற்றுகிறார்கள். அதிலும் சில பேர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் என்றெல்லாம் பேசுவது தவறான ஒன்று. எல்லோரும் சக மனிதர்கள். அவர்களுக்குரிய பிரச்சினையை பார்க்க வேண்டும் அதை ஜாதி மதம் பிரச்சனையாக மாற்றக் கூடாது. நான் வன்னியராக சூர்யா சாருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment