Advertisment

வீட்டுக்குள் பார் செட்டப் வைத்த பிக்பாஸ் நடிகை... நிர்வாணமாக நடித்த சீரியல் நடிகர்... டாப் 5 சீரியல் செய்திகள்

தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த சீரியலின் இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அகில், அஞ்சலி ஹேமா ஆகியோர் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
வீட்டுக்குள் பார் செட்டப் வைத்த பிக்பாஸ் நடிகை... நிர்வாணமாக நடித்த சீரியல் நடிகர்... டாப் 5 சீரியல் செய்திகள்

பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முடிவே இல்லையா?

Advertisment

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், இடையில் கதையை ட்ராக் மாற்றி கொண்டு சென்றதால் இந்த சீரியல் எப்போது முடியும் என்று ரசிகர்களே கேட்க தொடங்கிவிட்டனர். இதனிடையே தற்போது பாரதி கண்ணம்மா பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த சீரியலின் இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அகில், அஞ்சலி ஹேமா ஆகியோர் உள்ளனர். இதில் என்டே இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனால் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு இப்போது முடிவு இல்லை என்று சூசகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

வீட்டுக்குள் பார் செட்டப் வைத்த பிக்பாஸ் நடிகை

அவன் இவன் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி அய்யர், தொடர்ந்து தெகிடி, திரு திரு துரு துரு, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2-வது சீசனில் பங்கேற்ற இவர், நடிப்பில் சமீபத்தில் கூர்மன் படம் வெளியானது. இந்நிலையில், தனது வீட்டில் பார் செட்டப் வைத்துள்ள ஜனனி அய்யர் இதை தனது பலநாள் கனவு என்று கூறியள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார்?

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வாரத்தின் இறுதியில் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் மகேஷ்வரி வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடை இல்லாமல் நடித்த பிரபல சீரியல் நடிகர்

சின்னத்திரையின் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் நடிகர் பிரஜின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ள படம் டி3. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் தயாராகியுள்ள இந்த படத்தை பாலாஜி என்பவர் இயக்கியுள்ளார். இது குறித்து பேசிய நாயகன் பிரஜின், முதன் முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளேன். இதில் ஒரு காட்சிக்காக நிர்வாணமாக ஓடியுள்ளேன். நிறைய நாட்கள் இரவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பெரிதாக பேசப்படும் என்று கூறியுள்ளார்.

நாயகனாக வில்லன் நடிகர்

கைதி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அசத்திய அர்ஜூன் தாஸ் தற்போது வசந்தபாலன் இயகக்த்தில் அநீதி என்ற படத்தில் நாயகான நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது சாந்தகுமார் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். மௌனகுரு மகாமுனி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சாந்தகுமார் இயக்கும் 3-வது படம் இது. இதில் மகாமுனி படம் 30 சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Bharathi Kannamma
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment