Advertisment

கலர்ஸ் தமிழ் தொடரில் மூர்த்தி... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் அவ்வளவுதானா?

Tamil Serial Update : 12 வருடங்களாக திரைத்துரையில் இருந்து வரும் ஸ்டாலின் முத்து ஒரு சில திரைப்படங்களில் வில்லன் மற்றும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
கலர்ஸ் தமிழ் தொடரில் மூர்த்தி... அப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் அவ்வளவுதானா?

Tamil Serial Actor Stalin Muthu Entry In Colors Tamil Serial : தமிழில் குடும்ப உறவுகளை பற்றிய சீரியல் என்று எடுத்துக்கொண்டால் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. விஜய் டி.வியின் ப்ரைம் டைம் சீரியலான இந்த சீரியலில் சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் அவசியம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உள்ளிட்ட பல தேவைகளை மைப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதன் மூலம் இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் சமீப காலமாக இந்த சீரியல் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருவது மறுக்க முடியாத உண்மை. சகோதர பாசத்திற்கு பெயர் பெற்ற இந்த சீரியலில் தற்போது அனைவரும் உள்ளுக்குள் ஒருவித பிரிவுடன் தான் இருக்கிறார்கள்.

இதை மேலும் அதிகரிக்கும் வகையில் கடந்த வாரத்தில் மீனாவின் அப்பா முல்லையின் அம்மா தொடங்கி வைத்த சண்டை இப்போது குடும்பத்தில் நிரந்தர பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனமுடைந்த மூர்த்தி ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில்,வீட்டை விட்டு வெளியில் சென்ற கதிர் அண்ணன் இப்படி இருக்கும் நிலையிலும் வீட்டை விட்டு வந்தது வந்ததுதான் இனி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

இதனால் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீரியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், வெங்கட், குமரன், ஹேமா, காவியா உள்ளிட்டபலர் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். மேலும் தமிழ் மடடுமல்லாது பாண்டியன் ஸ்டோர்ஸ தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பாலும் இந்த சீரியலில் நடித்து வரும் நட்சத்திரங்கள், தமிழில் மற்ற சீரியல்கள் எதிலும் நடிக்கவில்லை. ஜீவா கேரக்டரில் நடித்து வரும் வெங்கட் மட்டும் சன்டிவியின் ரோஜா சீரியலில் நடித்து வந்தார். ஆனால் தற்போது அவரும் அந்த சீரியலில் இருந்து விலகி பாண்டியன் ஸ்டோர்ஸில் மட்டும் நடித்து வருகிறார்.

ஆனால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஸ்டாலின் முத்து தற்போது வேறு சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்துள்ளார். மற்ற சேனல்களுக்கு இணையாக சீரியலில் கவனம் செலுத்தும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பச்சக்கிளி என்ற தொடரில் நடித்துள்ளார்.

12 வருடங்களாக திரைத்துரையில் இருந்து வரும் ஸ்டாலின் முத்து ஒரு சில திரைப்படங்களில் வில்லன் மற்றும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் அண்ணன் மகனான இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மகன் மூர்த்தி கேரக்டரில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நலையில், தற்போது வெளியாகியுள்ள பச்சக்கிளி சீரியலின் ப்ரமோவில் ஸ்டாலின் முத்துவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வரும் நிலையில், இந்த சீரியலில் என்ட்ரி ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Colors Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment