ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து நடிகை அர்ச்சனா விலகவதாக அதிகாரப்பூாவமாக அறிவித்துள்ளார்.
தமிழில் 1980-ம் ஆண்டு வெளியான தைபொங்கல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அர்ச்சனா. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், துணிவே தோழன் (1980), காதல் ஓவியம் (1982), வசந்தமே வருக (1983), நீங்கள் கேட்டவை (1984), ஏமாறாதே ஏமாறாதே (1985) ஆகிய படங்கள் அர்ச்சனாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
அதன்பிறகு, புயல் கடந்த பூமி (1985), ரெட்டை வால், குருவி (1987),வீடு (1988), சந்தியா ராகம் (1989), வைதேகி வந்தாச்சு (1991), உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த அர்ச்சனா பரட்டை என்கிற அழகு சுந்தரம் (2007) படத்தின் தனுஷுன் அம்மாவாகவும்,, ஒன்பது ரூபை நோட்டு (2007) படத்தில் சத்யராஜூன் மனைவியாகும், கேணி (2018), சீதக்காதி (2018), மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை (2019) படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாகவும் நடித்திருந்தார்..
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் பெங்காலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அர்ச்சனா மீனாட்சி பொண்ணுங்க என்ன சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். மோக்ஷிதா பாய், அர்ச்சனா, ஆர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் இந்த சீரியலில் காயத்ரி யுவராஜ், பிரணிகா தக்ஷு, சசிலயா, ஆனந்தமௌலி, சுபத்திரா, பிரபாகரன், சுகன்யா, ஹேம தயாள், சுதர்சனம், ஆர்த்தி, ராம்குமார், சிங்கராஜா, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சமீப நாட்களாக தமிழ் தொலைக்காட்சி பிரபலங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்லது பிற காரணங்களால் தங்கள் பிரபலமான சீரியலை விட்டு வெளியேறும் நிகழ்வு நடந்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அர்ச்சனாவும் இணைந்துள்ளார். மீனாவட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து அர்ச்சனா விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது அர்ச்சனா தான் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அர்ச்சனா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம் எல்லாருக்கும் அதைத் தெரிவிக்கணும்னு ஆசைப்பட்டேன், மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிவிட்டேன்… மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் மீனாட்சி கேரக்டர் கொடுத்ததற்கு நன்றி… அனைவரையும் இன்னொரு நிகழ்வில் சந்திக்கிறேன் நன்றி” என்று கூறியுள்ளார்.
தற்போது அர்ச்சனா விலகியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த மீனாட்சி யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil