Advertisment

செம்ம க்யூட்... ஏஞ்சல் ஃபியூட்டி... சைத்ரா ரெட்டி வைரல் போட்டோஸ்

தமிழில் ஸ்ரீகுமார் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான சைத்ரா ரெட்டி நெகடீவ் ரோலில் நடித்து அசத்தினார்.

author-image
WebDesk
New Update
Chaithra Reddy

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி

சன்டிவியின் கயல் சீரியல் மற்றும் அஜித்துடன் வலிமை படத்தில் நடித்த நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சைத்ரா ரெட்டி, பெங்களூருவில் தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவனு மேட்டே ஷ்ரவாணி என்ற கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

publive-image

தமிழில் ஸ்ரீகுமார் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமான சைத்ரா ரெட்டி நெகடீவ் ரோலில் நடித்து அசத்தினார்.

publive-image

இதன் மூலம் முதல் சீரியலிலேயே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தொடர்ந்து 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான எனெண்டு ஹெசரிடலி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

publive-image

அதனைத் தொடர்ந்து வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள சைத்ரா ரெட்டி தற்போது சன்டிவியின் கயல் சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

publive-image

வில்லியாக நடித்து பிரபலமான சைத்ரா தற்போது நாயகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதில் ராஜா ராணி புகஜ் சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சைத்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

மேலும் இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களிலும் இவரது சிரிப்பு தனி கவனம் ஈர்த்து வருகிறது. வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment