Advertisment

கலர்ஸ் தமிழில் என்ட்ரி ஆன வெண்பா... அப்போ பாரதி கண்ணம்மா சீரியல்?

Tamil Serial Update : புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கலர்ஸ் தமிழுக்கு வந்த ப்ரீனா, அப்போ பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிவிடுவாரா என்று கேட்டு வருகின்றனர்

author-image
WebDesk
New Update
கலர்ஸ் தமிழில் என்ட்ரி ஆன வெண்பா... அப்போ பாரதி கண்ணம்மா சீரியல்?

Bharathi Kannamma Farina Azad Update : விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கை பல மாதங்களாக ஆக்கிரமித்து வரும் முன்னணி சீரியல் பாரதி கண்ணம்மா. அருண்பிரசாத், வினுஷத தேவி முதன்மை கேரக்ரில் நடித்து வரும் இந்த சீரியலில் வில்லத்தனம் செய்து பிரபலமானவர் ப்ரீனா ஆசாத். வெண்பா கேரக்டரில் நடித்து வரும் இவர், பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இதுவே அவரது கேரக்டரில் வெற்றிக்கு முக்கிய சாட்சி.

Advertisment

நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களை மகிழ்வித்த ப்ரீனா ஆசாத் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் மூலம் பெரும் பிரபலமானார். தற்போது தனது வில்லத்தனத்தின் மூலம் அதகளம் செய்து வருகிறார். தான் கர்ப்பமாக இருந்த காலத்திலும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர், சமீபத்தில் ஒரு ஆண்குழந்தை பெற்றெடுத்தார். அதன்பிறகு சில எபிசோடுகள் ஓய்வில் இருந்த ப்ரீனா தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லத்தனத்தை தொடங்கியுள்ளார்.

ஆனால் இவர் கர்ப்பமாக இருந்தபோதும், டெலிவரிக்கு சென்றபோதும், பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு ப்ரீனா ஆசாத் விலக உள்ளதாக பல கருத்துக்கள் உலா வந்தது. ஆனால் சீரியல் குழு இவரையும், அவர் பாரதி கண்ணம்மா சீரியலையும் விடுவதாக இல்லை. இதனால் இவர் சிறைக்கு செல்வதுபோல காட்சி அமைத்து அவருக்கு டெலிவரிக்கு ஓய்வு கொடுத்துவிட்டனர்.

publive-image

பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய அடையாளமாக இருக்கும் ப்ரீனா ஆசாத், தற்போது வேறு சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். கலர்ஸ்தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய சீரியலான அபி டெய்லர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ரேஷ்மா மதன் இணைந்து நடித்து வரும் இந்த சீரியலில், தற்போது ப்ரீனா ஆசாத் எண்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கலர்ஸ் தமிழுக்கு வந்த ப்ரீனா, அப்போ பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிவிடுவாரா என்று கேட்டு வருகின்றனர். இந்த கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை. அதே சமயம் ப்ரீனா, ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான தறி என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அபி டெய்லர் சீரியலில் அபி கேரக்டரின் தோழியாக நடித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Farina Azad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment