Advertisment

பியூட்டி குயின்... வித்தியாசமான சேலை கலெக்ஷன்ஸ் : கேப்ரியல்லா டிப்ரண்ட் க்ளிக்ஸ்

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார்.

author-image
WebDesk
New Update
பியூட்டி குயின்... வித்தியாசமான சேலை கலெக்ஷன்ஸ் : கேப்ரியல்லா டிப்ரண்ட் க்ளிக்ஸ்

விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமானவர் கேப்ரியல்லா. பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்த இவர், 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Advertisment
publive-image

பின்னர் கேப்ரியல்லா, விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

publive-image

தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார்.

publive-image

தற்போது இந்த சீரியலில் கேப்ரியல்லாவின் முன்னாள் காதல் பற்றி தெரிந்துகொண்ட பார்த்தி வேறு திருமணத்திற்கு ரெடியாகிவிட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

publive-image

ஈரமான ரோஜாவே முதல் சீசனில் பவித்ரா மற்றும் திரவியம் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment