Advertisment

'ஆப்ரேஷன் செய்தாச்சு... அந்த ஆபத்து இல்லை': பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு என்ன ஆச்சு?

லாக்டவுன் காலத்தில், தனியாக ஹேமா டைரீஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கிய அவர். பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

author-image
WebDesk
New Update
மேக்கப் இல்லனாலும் நீங்க அழகுதான் மீனா... ஹேமா ராஜ்குமார் நியூ போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கூட்டுக்குடும்பத்தின் நன்மைகள் உள்ளிட்ட ஏராளமான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது.

ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா ராஜ்குமார். குமரன், வெங்கட், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருமு் இந்த சீரியலுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீமெக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகள் மீனா கேரக்டரில் நடித்து புகழ்பெற்று வருபவர் ஹேமா ராஜ்குமார். தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த இவர், சிறுவது முதலே நடிப்பின் மீது ஆர்வமாக இருந்ததால் திரைத்துறையில் வாய்ப்பு தேடியுள்ளார். இதற்கிடையே சைதாப்பேட்டை காவல்நிலை அலுவகத்தி் ஹார்டுவேர் என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.

தொடர்ந்து வசந்த் தொலைககாட்சியின் செய்தி வாசிப்பாளரான சின்னத்திரையில் அறிமுகமான ஹேமா, தொடர்ந்து விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் பிரபலமானார். தொடர்ந்ர் மெல்ல திறந்தது கதவு. சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியலிகளில் முக்கிய கேரக்ட்டரில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கேரக்டர் இவரை ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாக்கியது.

இதன் மூலம் இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. மேலும் லாக்டவுன் காலத்தில், தனியாக ஹேமா டைரீஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கிய அவர். பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவர் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில். தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனக்கு ஆப்ரேஷன் என்ற டைட்டிலுடன் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில, அவரது கழுத்துக்கு கீழான பகுதியில் கட்டி ஒன்று இருந்துள்ளது. இது கேன்சர் கட்டியாக இருக்குமோ என்ற படத்தில் டாக்டரிடம் சென்றுள்ளார் ஹேமா. தொடர்ந்து கட்டியை நினைத்து மனஉலைச்சலில் இருந்த ஹேமா குடும்பத்துடன் தீவிர ஆலோசனைக்கு பிறகு ஆப்ரேஷன் செய்து கட்டியை நீக்க முடிவு செய்துள்ளார்.

இந் ஆப்ரேஷனின் போது அவரது தங்கை கூடவே இருந்து அவரை பார்த்துகொண்டு வருகிறார். இந்த வீடியோவில் ரசிகர்களிடம் பேசும் ஹேமா பெண்கள் உங்கள் உடல் பகுதியில் இருக்கும் கட்டிகள் மீது அலச்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது என்று கூறியுள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pandian Stores Serial Serial Acress Hema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment