Advertisment

குடும்ப வறுமை... எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி... பாரதிராஜாவால் அறிமுகம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி லைப்

Tamil Serial Update : சீரியலில் கஸ்தூரி என்ற கதாப்பாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் கம்பம் மீனா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குடும்ப வறுமை... எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி... பாரதிராஜாவால் அறிமுகம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி லைப்

Serial Actress Kambam Meena Lifestyle : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்று வருவது அனைவரும்அறிந்த ஒன்று. சீரியல் மட்டுமல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், கிராமத்து பின்னணி கொண்ட சீரியல்கள் ஒளிபரப்புவதில் விஜய்டிவிக்கு தனி இடம் உண்டு.

Advertisment

அந்த வகையில் கிராமத்து அம்சங்கள் நிறைந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிரப்பாகும் இந்த சீரியல் சகோதர பாசம் கூட்டு குடும்பத்தின் நன்மை என குடும்ப பின்னணியை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கஸ்தூரி என்ற கதாப்பாத்திரத்தில் வில்லத்தனம் கலந்த ரோலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் கம்பம் மீனா.

வட்டா மொழி நடிகையாக சீரியலில் வலம் வரும் கம்பம் மீனா இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கிய தெற்கத்திபொண்ணு என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். நாச்சி முத்து மீனா என்ற இயற்பெயர் கொண்ட மீனா. இவரின் முதல் சீரியல் தெற்கத்தி பொண்ணு தான். இவரின் சினிமா இதுவரை சுமார் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த மீனாவுக்கு, பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. அதன்பிறகு வாழ்கை புரிவதற்குள் 2 குழந்தைகள்.

தொடர்ந்து குடும்ப வறுமை காரணமா எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றியுள்ளார். பணியின் போது கம்பம் சுற்று வட்டாரத்தில் இவரை தெரியாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலமாக இருந்துள்ளார். தைரியமான பெண்ணாக இருந்து வரும் மீனா, கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியலை தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்த போது அந்த சீரியலில் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க மீனா தேர்வானார்.

அதன்பிறகு  படங்களில் நடிக்க தொடங்கிய மீனா, சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தி யோசி ,ராவணன், கடல், கைதி, சகுனி என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் மறைந்த இயக்குனர் தாமிராவின் இயக்கத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்த இரட்டை சுழி படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கே மருமகளாக ரோலில் நடித்தார். தற்போது சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி அத்தாச்சி, பாக்கியலட்சுமி செல்வி அக்கா மற்றும் தேன்மொழி ஆகிய சீரியல்களில் பிஸியாக நடித்துவரும் மீனா வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ராதிகாவை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ள மீனா அவருடன் ஒரு கட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு சீரியல் அல்லது படத்தில் கொடூர வில்லியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். சிறுவயதில் தந்தை இழந்து திருமணம் என்றால் என்னவென்று தெரியாத வயதில் திருமணம் செய்துகொண்டு பல தடைகளை கடந்து தற்போது ஒரு நடிகையாக பிரபலமாகியுள்ள கம்பம் மீனா பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment