சென்னையில் தொடர்ந்து பொதை பொருள் பயன்பாடு மற்றும் இதனை விற்பனை செய்யும் டீலர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது போதை பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அவ்வப்போது போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது போதைப்பொருள் வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில், சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை மீனா, சில சீரியல்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சென்னை ராயப்பேட்டை அருகே போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். இவரிம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் தொடர்ச்சியாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவரை காவலில் எடுத்த போலீசார், இவரது பின்புலத்தில் யார் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வாட்ஸ்அப் குழு அமைத்து விலை உயர்ந்த போதைப்பொருளை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ள நிலையில், சின்னத்திரை பிரபலங்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகினறனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சுந்தரி சீரியல் நடிகை, மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்தவுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன்பின் சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“