Advertisment

நடனத்தில் முத்திரை... சின்னத்திரையின் பெஸ்ட் அம்மா... சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன் லைப்

Tamil Serial Update : அம்மா கேரக்டரை செண்டிமெண்டாக் கொண்டு செல்வதில் கை தேர்ந்த மீரா, வெள்ளித்திரையில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பது என்றாரும் ஐயம் ரெடி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நடனத்தில் முத்திரை... சின்னத்திரையின் பெஸ்ட் அம்மா... சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன் லைப்

Tamil Serial Actress Meera Krishnan Lifestyle : சின்னத்திரையில் தற்போது அம்மா கேரக்டரில் நடித்து அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்று வரும் இளம் நடிகை மீரா கிருஷ்ணன். 36 வயயே ஆன இவர் விஜய்டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தன்னை விட வயது அதிகமான நடிகருக்கு அம்மாவாக நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், முறைப்படி நடனம் கற்றுக்கொண்டவர். அதை கொண்டு பள்ளியில் நடைபெற்ற விழாவில் நடனமாடியதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு, மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisment

கடந்த 2003-ம் ஆண்டு வெளியான மார்க்கம் படத்தில் முன்னணி நடிகரான நெடுமுடி வேணுவுடன் நடித்திருப்பார். அதன்பிறகு 2004-ல் மஞ்சுபோல் ஒரு பெண்குட்டி படத்தில் நடித்த அவர் அதே ஆண்டு மலையாளத்தில் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கினார். நடித்துக்கொண்டே படிப்பை தொடர்ந் இவர், படிப்பை நிறைவு செய்து, சீரியலில் தனது கவனத்தை திருப்பினார். திருமணத்திற்கு பின் சென்னையில் செட்டில் ஆனா மீரா சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு குடுத்த்தின் மீது கவனம் செலுத்தினார்.

நடன ஆசிரியர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட மீராவுக்கு தற்போது இரு மகன்கள் உள்ளனர். கணவரின் தொடர்புகள் காரணமாக மீராவுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி 2012-ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக பொக்கிஷம் சீரியலில் நடித்து தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதற்கு முன்பே மலையாளத்தில் பல சீரியல்களில் நடித்திருந்தார்.

பொக்கிஷத்தை தொடர்ந்து சன்டிவியில் நாயகி சீரியலில் நாயகனின் அம்மாவாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார். இந்த சீரியலுக்கு பின்னர் சின்னத்திரையில் அம்மா வேடம் என்றால் அது மீரா கிருஷ்ணன் தான் என்று சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றார். அதன்பிறகு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடித்த மீரா ராதிகாவின் சித்தி 2 சீரயலில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.

வில்லி வேடம் தான் என்றாலும் அந்த சீரியலில் பாசமிகு தாயாகவும் நடித்திருப்பார். இந்த நேரத்தில் கடைசியாக விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தன்னைவிட வயது அதிகமாக நடிகர் தீபகிற்கு அம்மாவாக நடித்து வருகிறார். கோதை என்ற கேரக்டரில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துள்ள நிலையில், இவரது கேரக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அம்மா கேரக்டரை செண்டிமெண்டாக் கொண்டு செல்வதில் கை தேர்ந்த மீரா, வெள்ளித்திரையில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பது என்றாரும் ஐயம் ரெடி என்று கூறி வருகிறாராம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment