Advertisment

என்னது தாஜ்மஹால் ஹைதராபாத்க்கு வரணுமா? சீரியல் நடிகையின் வித்தியாசமான வேண்டுதல்

Tamil Serial Update : சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் தனியாக யூடியூப் சேனல் மூலம் பெண்களுக்கு தேவையான டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.

author-image
WebDesk
New Update
என்னது தாஜ்மஹால் ஹைதராபாத்க்கு வரணுமா? சீரியல் நடிகையின் வித்தியாசமான வேண்டுதல்

சின்னத்திரை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியலகள் ஒளிபரப்புவதில் விஜய் டிவி முன்னணியில் இருந்து வருகிறது. தமிழில்ஹிட்டான திரைப்படங்களின் பெயர்களை பயன்படுத்தி பல ஹிட் சீரியல்கள ஒளிபரப்பி வரும் விஜய் டிவியில் சினிமா டைட்டில் இல்லாமல் ஹிட்டடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இதில், சகோதர ஒற்றுமை கூட்டுக்குடும்பத்தின் நன்மை உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் ஹேமா ராஜ்குமார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், தனியாக யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர், அதில் பெண்களுக்கு தேவையான டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் ஹேமா ராஜ்குமார் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரைலாகி வருகிறது. தெலுங்கு மொழியில் உள்ள ஒரு மாணவனின் வீடியோவுக்கு டப்ஸ்மாஷ் செய்துள்ள ஹேமா டெல்லியில் இருக்கும் தாஜ்மஹாலை உடனடியாக ஹைதராபாத்க்கு மாற்ற வேண்டும் வேண்டும் என்று ஒரு மாணவன் வேண்டிக்கொள்கிறான்.

அப்போது அவனது அப்பா இப்போ உடனே தாஜ்மஹால் ஹைதராபாத்க்கு வர என்ன அவசியம் என்று கேட்க, பரிட்சையில், தாஜ்மஹால் இருக்கும் இடம் ஹைதராபாத் என்று எழுதிவிட்டதாக மாணவன் கூறுகிறான். இதற்கு டப்ஸ்மாஷ் செய்துள்ள ஹேமா ராஜ்குமார் வீடியோ தற்போது இணையத்தில் வைராகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Serial Acress Hema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment