‘ஐ அம் சிங்கிள்; வெயிட்டிங் ஃபார் Soul mate’: ரோஜா நாயகி ஜிலீர் மெசேஜ்

Tamil Serial Update : ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Roja Serial Actress Priyanka Viral Video : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் பிரியங்கா நல்காரி. தமிழில் ஓரிரு படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள இவர் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.  அவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் பக்கம் கிட்டத்தட்ட 5 லட்சம் ஃபாலோவர்களை கடக்க உள்ளது. ரோஜா சீரியலில், ஹேம்லி லுக்கில ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான இவர், இந்த சீரியலில், நாயகன் அர்ஜூனுடன் செய்யும் ரொமான்ஸ் கட்சிகளே இந்த சீரியல் வெற்றிக்குக்கு முக்கிய காரணமாக சொல்லலாம்.  ஆனால் தற்போது இவர் ஹோம்லி அல்ல மார்டன் உடையும் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

சீரியலில் ரொமான்ஸ் செய்தாலும் நிஜ வாழ்க்கையில் சிங்கிள் தான் என அவரே இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். மேலும் தனியாக இருப்பது மகிழ்ச்சியாகவும சுதந்திரமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். (“Happiness is being young, free and Single”).  இந்நிலையில், தற்போது ஒரு மலைப்பிரதேசத்தில் சுற்றுலா சென்றுள்ள பிரியங்கா, வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ பதிவில் மார்டன் உடை அணிந்துள்ள அவர், கவர்ச்சியாக நடனமும் ஆடியுள்ளார். ஏற்கனவே தான் சிங்கிள் என அவர் கூறி இருந்த நிலையில் தனது soul mate க்காக காத்திருப்பதாக அவர் கூறி உள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில் “I love to travel..waiting for my travel partner(my soul)…” என அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress priyanka nalgari viral video with marden dress

Next Story
விபத்தில் சிக்கிய பிக் பாஸ் யாஷிகாவுக்கு அடுத்தடுத்து சர்ஜரி; தங்கை ஓஷீன் ஆனந்த் தகவல்yashika anand health conditions, actress yashika anand, yashika anand car accident, yashika anand surgery, யாஷிகா ஆனந்த், யாஷிகா ஆனந்த் கார் விபத்து, யாஷிகா ஆனந்த் உடல்நிலை, ஓஷீன் ஆனந்த், yashika anand sister osheen anand, osheen anand says yashika anand's health conditions, tamil cinema news, tamil cinema updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express