அமீர் - பாவனிக்கு இந்த சீரியல் பிரபலம் ஃப்ரண்டா? ஆச்சரியத்தில் ரசிகர்கள் | Indian Express Tamil

அமீர் – பாவனிக்கு இந்த சீரியல் பிரபலம் ஃப்ரண்டா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

அமீர் என்னதால் வித்தியாசமாக ப்ரபோஸ் செய்தாலும் பாவனி அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார்.

அமீர் – பாவனிக்கு இந்த சீரியல் பிரபலம் ஃப்ரண்டா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சின்னத்திரையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் திரைத்துறையில் வாய்ப்பை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தின் புதுவரவு அமீர் பாவனி.

பிக்பாஸ் வீட்டில் காதலர்களாக சுற்றித்திரிந்த இவர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பிபி ஜோடிகள் என்ற விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இடையில் அமீர் அவ்வப்போது மேடையில் பாவனியிடம் தனது லவ் ப்ரபோசலை சொல்வது என இணையதளத்தில் வைரல் ஜோடிகளாக கவனம் ஈர்த்தனர்.

இவர்களின் லவ் சீனை பார்ப்பதற்காகவே பிபி ஜோடிகள் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது என்று சொல்லலாம். அதேபோல் அமீர் என்னதால் வித்தியாசமாக ப்ரபோஸ் செய்தாலும் பாவனி அதற்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியது. அப்போது அமீர் காதலை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ரசிகர்களும் பாவனியிடம் சொல்ல தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொண்ட நிலையில், பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் திருமண படலம் அரங்கேறிய எபிசோடு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நிகழ்ச்சி முடிவடைந்துவிட்ட நிலையில், இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில், தற்போது அமீர் பாவனி இருவரும் சன்.டி.வி ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் அமைத்து அமர்ந்துள்ள பிரியங்கா நல்காரி அவ்வப்போது வெளியில் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீர் பாவனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும ஹார்ட் எமோஜியை வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress priyanka nalkari with biggboss amir bhavani