அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி

சீரியலுக்கு வருவதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இதில் எந்நத படமும் ராதிகா ப்ரீத்திக்கு கைகொடுக்கவில்லை.

அப்போ சீரியல் நாயகி… இப்போ சினிமா நாயகி… மகிழ்ச்சியில் பூவரசி

சீரியலில் நாயகியாக நடித்து வரும் பலரும் அடுத்து திரைபபட வாய்ப்பை தேடி செல்வது வழக்கமான நடைபெறும் ஒன்று. ஆனால் சன் டிவி சீரியல் நடிகை ஒருவர் சீரியலுக்கு நடிக்க வரும் முன்பே நடித்த படம் தற்போது வெளியாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ராதிகா ப்ரீத்தி. தமிழில் பூவே உனக்காக சீரியல் மூலம் அறிமுகமான இவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார்.

அதே சமயம் சீரியலுக்கு வருவதற்கு முன்பு கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இதில் எந்நத படமும் ராதிகா ப்ரீத்திக்கு கைகொடுக்கவில்லை. இதில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழில் இவர் நடிப்பில தயாரானா நாதிரு தின்னா என்ற படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Nadhir Dhinna Tamil Movie Teaser | Swarna Babu | Sabyasachi, Radhika

அதன்பிறகு தமிழ் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராதிகா ப்ரீத்தி, தற்போது தனது முழு கவனத்தையும் திரைத்துறை பக்கம் திருப்பியுள்ளார். இதனிடையே இவர் நடிப்பில் கிடப்பில் போடப்பட்ட நாதிரு தின்னா என்ற படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வந்தது.

இந்த படம் வெளியானால் தனக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் வரும் என்று எண்ணி ராதிகா சீரியலை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், தற்போது ராதிகா ப்ரீத்தி நாயகியாக நடித்துள்ள நாதிரு தின்னா படம் வரும் ஜூலை 8-ந் தேதி வெளியாக உள்ளது.  இது தொடர்பான ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress radhika preethi movie release july 8th in tamil

Exit mobile version