Advertisment

விஜய் டிவி நடிகையுடன் ஜி.பி.முத்து... அட, என்ன இந்தப் பக்கம்?

Tamil Serial Update : மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை சந்தித்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
விஜய் டிவி நடிகையுடன் ஜி.பி.முத்து... அட, என்ன இந்தப் பக்கம்?

Tiktok G.P.Muthu Meet Serial Actress Raveena : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று மௌனராகம். இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா தனது சிறப்பான நடிப்பின் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்னும் 20 வயதைக்கூட கடக்காத அவர் இந்த சீரியலில், திருமணமான பெண்ணாக தனது நடிப்புத்திறமை வெளிப்படுத்தி வருகிறார்.

Advertisment

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் ரவீனா டிக்டாக் பிரபலம் ஜீபி முத்து உடன் சேர்ந்து எடுத்த ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் உங்க எல்லாருக்கும் பெரிய சர்ப்ரைஸ் நம்ம எல்லாரும் யாருடைய .ஃபேன் நான் அவரை இப்போ காட்டபோறேன் என்று சொல்லிவிட்டு ஜி.பிமுத்துவை காண்பிக்கிறார்.

இதில் இந்த வீடியோவை பார்த்து அசிங்கமா கமெண்ட் பண்ணீங்க அவ்ளவுதான் என்று ஜி.பி.முத்து பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,  அதை பார்த்த நெட்டிசன்கள் வயதிற்கு ஏற்ற ஆட்களுடன் பழகுங்கள் என கமெண்டில் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரவீனா குறிப்பிட்டு இருக்கும் வரியையும் சில ட்ரோல் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mouna Raagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment