Advertisment

பாரம்பரிய அரண்மனையில் ஹோம்லி நடிகை... ரித்திகா தமிழ் கேரளா டைரீஸ்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Rithika Tamil

ரித்திகா தமிழ்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா தமிழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. அதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

publive-image

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரித்திகா தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

இந்த தொடரில் திருமணமாகி கணவனை இழந்து கை குழந்தையுடன் இருக்கும் அமிர்தா கேரக்டர் பாக்யாவின் மகன் எழிலை திருமணம் செய்துகொண்டார்.

publive-image

இதில் அமிர்தா – எழில் கேரக்டர் இடையேயான ரொமான்ஸ் மற்றும் பாக்யா எழில் கேரக்டர்களுக்கு இடையிலான பாசம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

இதனிடையே கடந்த சில மதங்களுக்கு முன்பு திடீரென ரித்திகா திருமணம் செய்துகொண்டார். இந்த திடீர் திருமண தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா  அவ்வப்போது சில முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

publive-image

அந்த வகையில் ரித்திகா திருவனந்தபுரம் சுற்றுலா சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment