Advertisment

போட்டோஸ்க்கு லைக் போட மனசே வரலயாம்... ரித்திகாவுக்கு வந்த சோதனைய பாருங்க

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரித்திகா தற்போது பாக்யாவின் மருமகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

author-image
WebDesk
New Update
Rithika Tamil

நடிகை ரித்திகா தமிழ்

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரித்தியாக தமிழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரித்திகா தமிழ் செல்வி. அதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.

publive-image

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரித்திகா தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

திருமணமாகி கணவனை இழந்து கை குழந்தையுடன் இருக்கும் அமிர்தா கேரக்டர் பாக்யாவின் மகன் எழிலை திருமணம் செய்துகொள்வது போன்று காட்சிகள் உள்ளது.

publive-image

இந்த சீரியலில் அமிர்தா – எழில் கேரக்டர் இடையேயான ரொமான்ஸ் மற்றும் பாக்யா எழில் கேரக்டர்களுக்கு இடையிலான பாசம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

இதனிடையே கடந்த சில மதங்களுக்கு முன்பு திடீரென ரித்திகா திருமணம் செய்துகொண்டார். அவரது திடீர் திருமண தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

அனைத் தொடர்ந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரித்திகா தற்போது பாக்யாவின் மருமகளாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

publive-image

முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வரும் ரித்திகா தற்போது வித்தியாசனமான சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் உங்க போட்டோஸ்க்கு லைக் போடவே மனசு வரமாட்டேங்குது என்று கமெண்ட் செய்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment