Tamil Serial Actress Roshini Haripriyan Update : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மததியில் பெரிய அறிமுகமட தேவையில்லை. ஒரு குடும்ப பெண் தன் வாழ்வில் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
இந்த சீரியலில கண்ணம்மா என்ற முதன்மை கேரக்டரில் நடித்து வந்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஸ்ராங்காக இடம் பிடித்த ரோஷ்னி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், தற்போது கண்ணம்மா கேரக்டரில் வினுஷா தேவி நடித்து வருகிறார்.
ஆனாலும் பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷ்னியின் இடம் காலியாக உள்ளதாகவே ரசிகர்கள் பலரும் கூறி வரும் நிலையில், சீரியல் விலகலுக்கு பிறகு ரோஷ்னி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் முன்பு இல்லாத அளவுக்கு தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி ஹரிப்பிரியன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அவ்வாறு இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இணையத்திலும் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரோஷ்னி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாடல் பின்னனியில் ஒலிக்க, ரோஷ்னி விதவிதமான ஆடைகளில் அந்த பாடலுக்கு நடனமாடி வருகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சேலையில் தொடங்கிய மார்டன் உடை என 3 விதமாக ஆடைகளில் கலக்கும் ரோஷ்னியின் இந்த வீடியோவில், 3 வித ஆடைக்கும் 3 விதமான ஹேர்ஸ்டைலை மெய்ன்டைன் செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு சோ கியூட் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடிரயோ வெளியாகி அரைமணி நேரத்தில். சுமார் 8 ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.