Bigg Bos Shivani Viral Photo : சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஷவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்நிகழ்ச்சியில் சகபோட்டியாளர் பாலாவுடன் நெருங்கி பழங்கிய இவர் கடுமையான விமர்சனஙகளை சந்தித்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், 98 நாட்கள் வரை இருந்தார்.
இந்நிலையில் , சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.9எம் பாலோவர்களை வைத்துன்னார். அவர்களுக்காகவே நடிகை ஷிவானி அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது ஷிவானி வெளியிட்டுள்ள புகைப்படம இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில், தலைகீழாக தொங்கி யோகா செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதை பார்த்து ரசிகர்கள் அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil