சீரியல்களில் வில்லியாக நடித்து கலக்கி கொண்டிருப்பவர் சுபலஷ்மி ரங்கன். பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். அப்போது கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி குறும்படங்களிலும் கலக்கியுள்ளார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் சீரியல்கள். யாரடி நீ மோகினி, அழகிய தமிழ் மகள் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்தார். இரண்டு படங்களில் நடித்துள்ளார். பின்னர் கண்மணி, அன்பே வா, திருமதி ஹிட்லர் என பல தொடர்களில் நடித்தார். நெகட்டிவ் ரோலில் நடிப்பது ரொம்ப பிடித்தமான ஒன்றாம் சுபலட்சுமிக்கு. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவரது புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிகிறது.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"