Advertisment

இதுதான் ஹோலி நடனமா மேடம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் ஹோலி ஸ்பெஷல்

Tamil Serial Update : தனது சேலைக்கு மேட்சாக நெக்லஸ் மற்றும் வளையல்கள் அணிந்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
இதுதான் ஹோலி நடனமா மேடம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் ஹோலி ஸ்பெஷல்

Serial Actress Sujitha Viral Video : பிறந்த குழந்தையாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகமானாலும், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜிதா தனுஷ். தமிழ் சின்னத்திரையின முன்னணி நடிகயைாக இருக்கும் இவர், தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற இவர், இந்த சீரியலின் தெலுங்கு வெர்ஷனில், அதே தனம் கேரக்டரை ஏற்று நடித்து வருகிறார். மேலும் சீரியல் மட்டுமல்லாது விளம்பர பட இயக்கம், உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர், நடிகை ஹன்சிகாவை வைத்து இயக்கிய விளம்பர படம் தொடர்பான மேக்கிங் வீடியோவை தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பொதுவாக சீரியல் நடிகைகள் பலரும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருப்பது போல சுஜிதாவும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இதில் அவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிம்பிளாக சேலையில் தோன்றும் சுஜிதா பின்னயில் ப்ளே ஆகும் பாடலுக்கு ஏற்றபடி நடனமாடுகிறார்.

இதில் அவர் தனது சேலைக்கு மேட்சாக நெக்லஸ் மற்றும் வளையல்கள் அணிந்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு, ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுக்களையும் கருத்தக்களையும் மற்றும் ஹோலி பண்டியை வாழ்த்தக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment