scorecardresearch

வைரமுத்துவை சந்திக்க காரணம் இதுதான்: சின்மயிக்கு விஜய் டி.வி நடிகை பதில்

விஜே அர்ச்சனா சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்திருந்தார். இது தொடர்பான புகைப்டங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

வைரமுத்துவை சந்திக்க காரணம் இதுதான்: சின்மயிக்கு விஜய் டி.வி நடிகை பதில்

சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்த சின்னத்திரை நடிகை அர்ச்சனாவுக்கு பாடசி சின்மயி எச்சரிக்கை கொடுத்த நிலையில், அவருக்கு அர்ச்சான பதில் அளித்துள்ளார்.  

சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலம் என்ட்ரி ஆனவர் விஜே அர்ச்சனா. நெகடீவ் கேரக்டராக இருந்தாலும் தனது முதல் சீரியல் என்று இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். மேலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள அர்ச்சனா சமீபத்தில் ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அர்ச்சனா சீரியலில் நடிப்பாரா அல்லது திரைப்படங்களில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. அதேபோல் பிரபல சீரியல் நடிகர் ஒருவருடன் அர்ச்சனாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அர்ச்சனா தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே விஜே அர்ச்சனா சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்திருந்தார். இது தொடர்பான புகைப்டங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதில் வைரமுத்து அர்ச்சனாசின் தலையில் கை வைத்து ஆசீர்வதிகப்பது போன்ற புகைப்படம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.

இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்திருந்த பாடகி சின்மயி,  ஆரம்பத்தில் இதுபோலத்தான் அனைத்தும் இருக்கும். அவரிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். அவரை சந்திக்கும்போது யாரையாவது துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் சற்று தள்ளியே இருங்கள் என்று கூறியிருந்தார். சின்மியின் இந்த அட்வைஸ் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

ஆனால் இந்த கமெண்டை விஜே ஆர்ச்சனா டெலிவிட் செய்துவிட்ட நிலையில், அதனைத ஸ்கிரீன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். இதனிடையே சமீபத்தில் சின்மயி ட்விட் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள விஜே அர்ச்சனா, நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என் தந்தை ஒரு தமிழ் பேராசிரியர். என் குடும்பத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. எல்லோரும் வைரமுத்து சார் பாடலை கேட்டிருப்பார்கள். ஆனால் நான் கேட்டது நாட்படு தேறல் அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நாக்கு செவந்தவரை.

நான் படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென அவரை சந்திதேன். அப்போது ஹாய் சார் எப்படி இருக்கீங்க நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகை. என்று சொன்னதும் அவர் என்னை ஆசீர்வதித்தார். அவ்வளவுதான் நான் அவரிடம் பேசினேன். தனிப்பட்ட முறையில் சின்மயி யார் என்று எனக்கு தெரியாது. எதாவது ஒரு விஷயம் நடந்தால் அதை பற்றி பேசுவார்கள் ஊர் வாயை அடைக்க முடியாது. இது ஒரு ஃபேன்கேர்ள் மூமெண்ட் புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும். புரிந்துகொள்ளாதவர்கள் அப்படியே போகட்டும் என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress vj archana reply to chinmayi comment viramuthu photo

Best of Express