Advertisment

செம்ம மாஸ்... சன் டிவி சீரியலில் பழம்பெரும் ஸ்டார் நடிகை அறிமுகம்!

tamil serial update : ரசிகர்கள் இன்சிலை பயன்படுத்தி அழைக்கும் ஒரே நடிகை கே.ஆர் விஜயா தான் என்று சொல்லாம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
செம்ம மாஸ்... சன் டிவி சீரியலில் பழம்பெரும் ஸ்டார் நடிகை அறிமுகம்!

வெள்ளித்திரையில் பழம்பெரும் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்துகொண்டிருந்த நடிகை தற்போது சன் டிவி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

Advertisment

தமிழில் சீரியலுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சில தொலைக்காட்சிகளில் ஒன்று சன்டிவி. காலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. அந்த வகையில், சன்டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய தொடர்களில் ஒன்று அப்பே வா. இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

தற்போது இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை மேலும் அதிகரிக்கும் வகையில் பழம்பெறும் நடிகை கே.ஆர். விஜயா சீரியலின் எண்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான இவர், எம்ஜிஆர் சிவாஜி, முத்துராமன் ஜெமினிகனேசன் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்கள் பலயருடன் இணைந்து நடித்துள்ளார். ரசிகர்கள் இன்சிலை பயன்படுத்தி அழைக்கும் ஒரே நடிகை கே.ஆர் விஜயா தான் என்று சொல்லாம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள இவர், தமிழில் கடைசியாக விஷாலின் சக்ரா படத்தில் நடித்திருந்தார்.

சமீபகாலமாக சினிமா பக்கம் வராமல் ஒதுங்கி இருந்த அவர் தற்போது சீரியலி் எண்ட்ரி கொடுக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்பே வா என்னும் சீரியலில் கதாநாயகனுக்கு தற்போது ஆக்சிடென்ட் நடந்து இருப்பது போலவும், அதனால் கதாநாயகி கோவிலில் சென்று சாமியிடம் முறையிட்டு வேதனையோடு பிரார்த்திக்கும்போது கேஆர்விஜயா  சாமியாக என்ட்ரி கொடுக்கிறார். இதுவரை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment