Advertisment

மாமாவுக்கு ஜெயில்... மாப்பிள்ளைக்கு சாப்பாடு: மாஸ் காட்டும் அண்ணா!

ஜீ தமிழின் அண்ணா, நினைத்தேன் வந்தாய் மற்றும் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
anna kdman

கல்யாண விஷயத்தில் கௌதம் போட்ட திடீர் கண்டிஷன்.. உச்சகட்ட கடுப்பில் சகுந்தலா - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மதுவின் அப்பா ஆசைப்படி எங்களது கல்யாணம் சிம்பிளாக தான் நடக்கும் என்று சொல்லிய நிலையில் இன்று, அதாவது மதுமிதாவின் குடும்பம் கோவிலுக்கு வருகின்றனர், கோவிலில் வைத்து மதுவின் அப்பா மாப்பிள்ளையை பிடித்து இருக்கா? என்று கேட்க மது அமைதியாக இருக்கிறாள்.

இங்கே சகுந்தலா அப்செட்டாக இருக்க அவளது அண்ணனும் அண்ணன் பையனும் என்னாச்சு என்று கேட்க இந்த மதுமிதா குடும்பத்தை அவ்வளவு லேசா நினைக்க கூடாது, இப்போவே கௌதமை கைக்குள்ள போட்டு கிட்டாங்க என்று கோபப்படுகிறாள். அடுத்து கௌதம் ரூமுக்குள் ஏசி ஆப் ஆகி இருக்க ரிமோட்டை தேடி தேடி டென்ஷனாகிறான், உடனே மதுமிதாவுக்கு போன் செய்து நீங்க கல்யாணத்தை சிம்பிளா நடத்துறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, ஆனால் மண்டபத்துல ஏசி இருக்கணும் என்று சொல்ல அதை கேட்டு கோவிலில் எல்லாரும் சிரிக்கின்றனர்.

பிறகு வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தினர் மதுமிதாவின் தோழிகள் என எல்லாரும் வீட்டிற்கு வருகின்றனர், மது கையில் இருக்கும் மோதிரத்தை பார்த்து அழகா இருக்கு என்று சொல்ல ரேணுகா மாப்பிள்ளை வீட்டில் போட்டது, விலை 8 லட்சம் ருபாய் என்று சொல்ல அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.  எல்லாரும் என் பொண்ணை ராசி இல்லாதவனு சொன்னேங்களே இப்போ பார்த்தீங்களா என்று எல்லாருக்கும் பதிலடி கொடுப்பது போல் பேசுகிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சௌந்தரபாண்டிக்கு ஷாக் கொடுத்த பாக்கியம்.. ஷண்முகம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி கையால் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட நிலையில் இன்று, சௌந்தரபாண்டி சனியனிடம் நான் திருடன் தான், கொலை காரன் தான் ஆனால் ஒழுக்கம் கெட்டவன் கிடையாது என்று சொல்லி அடி வெளுக்கிறார். அடுத்து முத்துப்பாண்டி அப்பாவையே கைது செய்த வருத்தத்தில் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்க முப்பிடாதி ஐயா உங்க வருத்தம் புரியுது, ஆனால் நீங்க ஒரு அதிகாரியாக செய்ய வேண்டியதை தான் செய்திருக்கீங்க என்று சாப்பிட சொல்ல முத்துப்பாண்டி தனது அப்பாவை பற்றி பெருமையாக பேசுகிறான்.

இன்னொரு பக்கம் சண்முகம் வீட்டில் எல்லாரும் சாப்பிட உட்கார்ந்திருக்க பாக்கியம் சாப்பிடாமல் வருத்தத்துடன் இருக்கிறாள். முத்துப்பாண்டி கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டான் என்று வருத்தப்பட சண்முகம் சரி சாப்பிடுங்க நாம சாப்பாடு கொண்டு போய் கொடுத்து சாப்பிட வைக்கலாம் என்று சொல்கிறான். அடுத்து இசக்கி மற்றும் பாக்கியம் என இருவரும் முத்துபாண்டிக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிட வைக்கின்றனர்.

சாப்பிட்டு முடித்து முத்துப்பாண்டி வெளியே வந்து கை கழுவ சண்முகம் உட்கார்ந்து இருக்க அதை பார்த்து இவன் எதுக்கு இங்க வந்தான் என்று கேட்க அண்ணன் தான் சாப்பாடு கொண்டு போய் கொடுக்க சொன்னதாக சொல்கிறாள். அடுத்து சனியன் சௌந்தரபாண்டியிடம் ஐயா அம்மா வந்திருக்காங்க என்று சொல்ல எனக்கு அவ வருவான்னு தெரியும் டா.. அவளால் நான் இல்லாமல் இருக்க முடியாது, மன்னிப்பு கேட்க வந்திருப்பா என்று பில்டப்பாக பேசுகிறான்.

அடுத்து முத்துப்பாண்டி அப்பாவை பார்த்துட்டு போறீங்களா என்று கேட்க அவரை நான் எதுக்கு பார்க்கணும்? அவ பண்ண தப்புக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று பல்பு கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரை துரத்த மனோகரி செய்யும் சூழ்ச்சி.. எழிலுக்கு உண்மைகள் தெரிய வருமா? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி பணத்தை கொடுத்து இன்ஸ்பெக்டரை தனது பக்கம் இழுத்து ரௌடியை தப்பிக்க வைத்த நிலையில் இன்று, எழில் தனது அம்மாவின் மடியில் படுத்து கொண்டு தனது வாழ்க்கையில் நடப்பதை பற்றி வருத்தப்பட்டு பேசுகிறான், இன்னொரு பக்கம் நான்கு குழந்தைகளும் சுடருடன் சேர்ந்து அவளது ரூமில் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் இந்த ரூமிலும் ஓடி வந்து விளையாட சுடர் வந்த பிறகு குழந்தைகள் சந்தோசமாக விளையாடுவதாக சொல்கின்றனர், அடுத்து தாலிக்கு தங்கம் வைக்கும் நிகழ்ச்சியை நாளைக்கு நடத்திடலாமா என்று கனகவல்லி கேட்க எழிலும் சம்மதம் சொல்கிறான். அதன் பிறகு எழில் அவனது ரூமுக்கு வர இந்து போட்டோ இருந் இடத்தில போட்டோ இல்லாமல் இருக்க அதை பார்த்து பீல் பண்ணுகிறான்.

அப்போது அங்கு வரும் இந்து ஆவி, நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க ஆனால் மனோகரியை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் அவ நல்லவள் இல்ல என்று சொல்கிறாள். அடுத்த நாள் நிகழ்ச்சியான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க சுடரின் அப்பா வீட்டிற்கு வர ஏதோ நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அவர் கிளம்பி செல்கிறார், இதை பார்த்த மனோகரி செல்வியை அனுப்பி சுடரின் அப்பாவை வீட்டிற்குள் அழைத்து வர சொல்கிறாள்.

சுடரின் அப்பா உள்ளே வர மனோகரின் அப்பா யார் என்று கேட்க சுடரின் அப்பா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள். அவரை வைத்து ஏதாவது செய்து சுடரை வீட்டை விட்டு துரத்த பிளான் போடுகிறாள். குழந்தைகள் சுடரின் அப்பாவை பார்த்ததும் தாத்தா என்று ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டு எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க இவரும் சாக்லேட் வாங்கிட்டு வந்திருப்பதாக சொல்லி எடுத்து கொடுக்க மனோகரி வில்லத்தனத்துடன் பார்க்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment