Advertisment

பாக்யாவின் கணவர் இவரா? ராதிகாவுக்கு ஷாக் கொடுக்க செம வாய்ப்பு

Tamil Serial Update : ராதிகாவே பாக்யா வீட்டுக்கு வருவது தெரிந்தால் தாத்தா சும்மா இருப்பாரா கண்டிப்பா இந்த போட்டோவை காட்ட முயற்சிப்பார்.

author-image
WebDesk
New Update
பாக்யாவின் கணவர் இவரா? ராதிகாவுக்கு ஷாக் கொடுக்க செம வாய்ப்பு

Tamil Serial Rating Baakiyalakshmi : விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. ராதிகாவுடன் அதிகமாப நேரத்தை செலவிடும் கோபி, பிஸினசே, கதி என்று கிடக்கும் பாக்யா என அனைவரும் அவர்களது வேலையை பார்த்துக்கொண்டிருக்கும்போது பாக்யாவுக்கு பெரிய பிரச்சினை வந்துவிட்டது.

Advertisment

ராதிகாவின் மகள் பிறந்த நாளுக்காக பாக்யாவிடம சாப்பாடு ஆர்டர் கொடுத்து அதை ஆசிரத்தில் கொடுக்க அந்த சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுந்தது. இதற்கு முக்கிய காரணம் பாக்யாதான் என்று சொல்லி, போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க.

அதன்பிறகு குழந்தைகள் மயங்கி விழுந்தது பாக்யா கொடுத்த சாப்பாட்டினால் இல்லை என்றும், யாரோ ஒருவர் கொடுத்த லட்டுதான் என்று உண்மையை எழில் நிரூபித்ததை தொடர்ந்து பாக்யா விடுவிக்கப்பட்டார். இப்போது கோபி ஒருபுறம், சொழியன், இனியா மறுபுறம் பாக்யாவை சமையல் தொழிலை கைவிடுமாறு கூறுகின்றனர்.

ஆனால் இதற்கு எழில் எதிர்ப்பு தெரிவிக்க பாக்யா என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே ஜெனியை கோவிலில் பார்க்கும் ராதிகா பாக்யா குறித்து விசாரிக்கிறார். சாப்பாடு விஷயத்தில் பாக்யாவை தப்பா நினைத்துவிட்டதாக வருந்துகிறார். அதன்பிறகு பாக்யாவை நேரில் சந்திக்க வருவதாக சொல்கிறாள்.

இங்குதான் எதாவது பெரிய ட்விஸ்ட் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதாவது கோபி கூடத்தான் ராதிகா பழகுகிறார் என்று தெரிந்து எச்சரித்த தாத்தா, பக்க வாதம் வந்த பிறகு கோபி பாக்யா இருக்கும் படத்தை எடுத்துக்கொண்டு ராதிகாவிடம் காண்பிக்க சென்றார்.

ஆனா இப்போ ராதிகாவே பாக்யா வீட்டுக்கு வருவது தெரிந்தால் தாத்தா சும்மா இருப்பாரா கண்டிப்பா இந்த போட்டோவை காட்ட முயற்சிப்பார். இப்போது உண்மை தெரியவந்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இயக்குநர் என்ன நினைக்கிறாரோ தெரியலையே

இன்னும் கொஞ்ச நாள் கோபியை காப்பாற்றுவோம் என்று நினைத்து காட்சி வைக்க போகிறாரா அல்லது, இதுவரைக்கும் போதும் கோபியை மாட்டிவிட்டுவிட்டு கதையை வேறு ரூட்டுக்கு திருப்ப போகிறாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Baakiyalakshmi Serial Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment