Baakiyalakshmi Serial Actors Viral Dance : விஜய் தொலைக்காட்சியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து வெளியாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதிலும் இந்த சீரியலின் முதன்மை கதாப்பாத்திரமான பாக்கியலட்சுமி மக்களின் மனங்களை கவர்ந்த ஒரு கதாப்பாத்திரமாக உள்ளது.
மேலும் இந்த சீரியலில் காமெடி கலந்த வில்லன் ரோலான கோபி கதாப்பாத்திரத்தின் செயல் சில நேரங்களில் ரசிகர்களை கடுப்பாக்கினாலும், சில நேரங்களில் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி வருகிறது. இல்லத்தரசியின் தினசரி மற்றும் வாழ்கையை மையமாக வைத்த இந்த சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம்.
மேலும் இந்த சீரியலில்நடிக்கும் நடிகர் நடிகைகள் பலரும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கின்றனர். அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில், தற்போது இந்த சீரியல் நட்சத்திரங்கள் 4 பேர் பங்கேற்றுள்ள ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோபி, பாக்கியா, ராதிகா மற்றும் செல்வி என்ற வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil