Advertisment

Vijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி

TamilSerial News : பாரதி கண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial : ஏசியை திருப்பி அனுப்பிய கண்ணம்மா : கடும் கோபத்தில் பாரதி

Bharathi Kannamma Serial Episode Update : ஹேமா கண்ணம்மாவிடம் இருப்பதால், அவள் வீட்டிற்கு பாரதி ஏசி அனுப்புகிறான். ஆனால கண்ணம்மா அந்த ஏசியை பாரதி வீட்டிற்கு திருப்பி அனுப்புகிறாள். இதற்கிடையே கண்ணம்மா வீட்டில் பேசிக்கொணடிருக்கும் துளசி, பாரதி வரும்போது லக்ஷ்மி இங்கு இருந்தால் என்ன ஆகும் என கேட்கிறார்.

Advertisment

அதற்கு கண்ணம்மா லட்சுமி எப்போதும் மற்றவர்கள் முன்னிலையில் சமையல் அம்மா என்று மட்டுமே அழைப்பார், அதனால் பாரதி வந்தாலும் பிரச்சனை இருக்காது என கூறுகிறாள்.  மேலும்,  ஹேமா இங்கு வந்து தங்கி இருப்பது லக்ஷ்மிக்கு இன்னும் தெரியாது என்ற நிலையில் லட்சுமி பள்ளி முடிந்ததும் ஹேமா இல்லாமல் பேச கூட ஆள் இல்லை என அவர் கூற, கண்ணம்மா உள்ளே இருக்கும் ஹேமாவை அழைக்கிறார்.

ஹேமாவை பார்த்து சர்ப்ரைஸ் ஆகும் லட்சுமியிடம்  நீ எப்படி இங்கே வந்த என கேட்க,  'என் வீடு பக்கத்தில் தான் இருக்கிறது. அம்மா ஊருக்கு போனால் சமையல் அம்மாவிடம் தான் இருப்பேன்' என பொய் சொல்கிறார். அதன்பிறகு பாரதி வீட்டில் சௌந்தர்யா லக்ஷ்மியின் வளர்ப்பு குறித்து பெருமையாக பேசுகிறார். அதன் பின் பாரதி வீட்டிற்கு வந்து சேர்கிறார். கூடவே அன் அனுப்பிய ஏசியும் வருகிறது. இதை கண்ணம்மா தான் திருப்பி அனுப்பிவிட்டார் என தெரிந்து கோபம் அடைகிறார்.

மேலும் நான் கொடுத்த பணத்தையும் வாங்கல ஏசியும் தருப்பி அனுப்பிவிட்டால் என்று கோபப்படும்போது ஹேமா எப்போதும் வசதியாக வாழப்போகும் பெண் தான், ஆனால் ஏசி இல்லாத சூழ்நிலையிலும் இருக்க அவள் பழகட்டும் என சௌந்தர்யா மற்றும் கணவர் இருவரும் கூறுகின்றனர். கண்ணம்மா பணம் வாங்கவில்லை என்றால் அது அவளது சுயமரியாதை எனவும் கூறுகின்றனர்.

இதை கேட்டு பாரதி கோபமாக கிளம்புகிறான்.  இதற்கிடையே வெண்பாவும் அவரது வேலைக்காரியும் அமர்ந்து பேசுகின்றனர். பாரதிக்கு உங்கள் மீது அன்பு இருப்பதாக தெரியவில்லை, எனறு சொல்லும் போது அந்த நேரத்தில் பாரதி வருகிறார். கண்ணாவுக்கு ரொம்ப திமிரு என சொல்லி நடந்த அனைத்தையும் கூறுகிறார். இவன் சொல்வதை கேட்டு வெண்பா ஷாக் ஆக அத்துடன் இன்றயை எபிசோடு முடிவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment