Advertisment

Tamil Serial News: பாரதியுடன் ஒரே காரில் கண்ணம்மா... விபத்து; டென்ஷன்!

Bharathi Kannamma Serial news : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் குறித்து வெளியாகியுள்ள ப்ரமோ ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

author-image
WebDesk
New Update
Tamil Serial News: பாரதியுடன் ஒரே காரில் கண்ணம்மா... விபத்து; டென்ஷன்!

Bharathi Kannamma Serial promo Update : விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடம்பெற்று வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கடந்த இரு வாரங்களாக இந்த சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஹேமா கடத்தல், பாரதி கண்ணம்மா சந்திப்பு, பாரதி ஹேமாவுடன் அமெரிக்க பயணம் என பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் ரசிகர்கள் ஒரு வித எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இந்த சீரியல் குறித்து கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் கடந்த வார இறுதியில் இந்த சீரியலில் ஹேமாவுடன் பாரதி அமெரிக்க் செல்ல ஏர்போர்ட் செல்லும்போது இடையில் ஹேமாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகிறது. இதனையடுத்து குடும்பத்தினர் அவளை மருத்துவமனையில் அனுமதித்ததை தொடர்ந்து  அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவள் சமையல் அம்மா என்று முனகிகொண்டே இருந்ததால், அவரை அழைத்து வர சொல்லி டாக்டர் கூறுகிறார். முதலில் தயக்கம் கட்டும் பாரதி பிறகு கண்ணமாவை அழைக்க கிளம்புகிறான்.

ஆனால் இடையில் வெண்பா அவனை தடுக்கும் நோக்கில் பேச, சௌந்தர்யா அவளை மிரட்டி அமரவைக்கிறாள். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அன்றைய எபிசோடு முடிவுற்றது. தொடர்ந்து இன்றிலிருந்து வரும் 24-ந் தேதி வரையான எபிசோடுகள் குறித்த ப்ரமோ இன்று வெளியாகியுள்ளது. இதில் கண்ணம்மா வீட்டிற்கு செல்லும் பாரதி அவளிடம் விஷயத்தை சொல்லி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறான். வழியில் பாரதி தாறுமாறக கார் ஓட்ட கண்ணம்மா பாத்துங்க என்று சொல்கிறாள்.

அப்போது இடையில் சைக்கிள் ஓட்டி வரும் நபர் மீது மோத அவர் பாரதியை திட்டிவிட்டு, கண்ணம்மாவிடம் உன்புருஷன்தானமா சொல்லக்கூடாதா என்று கேட்டுவிட்டு செல்கிறான். இதன்பிறகு காரில் வரும்போது கண்ணம்மா பாரதிக்கு தண்ணீர் கொடுக்கிறாள். அதை பாரதி வாங்க மறுக்கும்போது, இது உங்க தண்ணீ தா உங்க கார்ல இருந்துதான் எடுத்தது என்று சொன்னவுடன் வாங்கி குடிக்கிறான். அதன்பிறகு நீங்க பதட்டப்படாம நிதானமாக காரை ஓட்டுங்கள் எதுவும் ஆகாது என்று கூறுகிறாள் இத்துடன் இந்த ப்ரமோ முடிகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment