Advertisment

ஓவர் ரொமான்ஸ் காரணமாக ஒதுங்கிய ரோஷினி... கண்ணம்மா மாற்றம் இதற்குத்தானா?

Tamil Serial Update : பாரதி கண்ணம்மா சீரியலின் ரோஷ்னி ஹரிப்பிரியன் படவாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகினார் என்று தகவல் வெளியானது.

author-image
WebDesk
New Update
ஓவர் ரொமான்ஸ் காரணமாக ஒதுங்கிய ரோஷினி... கண்ணம்மா மாற்றம் இதற்குத்தானா?

Tamil Serial Bharathi Kannamma Rishni Haripriyan Update : விஜய்டிவியில் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் சந்தேக போராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் மற்ற மொழிகளிலும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் பாரதி ஒரு கட்டத்தில் தனது தோழியின் பேச்சை கேட்டு கண்ம்மாவை சந்தேகப்படுகிறான் இதை தெரிந்துகொண்ட கண்ணம்மா நிறைமாத கர்ப்பினியாக வீட்டை விட்டு வெளியேறி குழந்தை பெற்றெழுத்து வாழ்கையில் எப்படி முன்னேறுகிறாள் தனது கணவனை எப்படி சந்தேக பார்வையில் இருந்து விடுவிக்கிறாள் என்பதே இந்த சீரியலின் முக்கிய கதைக்கரு.

இதில் கண்ணம்மாவாக வினுஷா தேவி பாரதியாக அருண்பிரசாத் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த சீரியலின் தொடக்கத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்பிரியன் நடித்து வந்தார். தனது சிறப்பாக நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரோஷ்னி திடீரென விலக காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆராய தொடங்கினார்.

இதில் அவருக்கு படவாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகினார் என்று தகவல் வெளியானது. மேலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவர் விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது சீரியலில் நீதிமன்ற உத்தரவின்படி பாரதி கண்ணம்மா இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி ரொமான்ஸ் மோதல்கள் அரங்கேறி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ரோஷ்னி தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியதாக கூறியது இதற்காகத்தானா இப்போதுதான் புரிகிறது என்று கூறி வருகின்றனர். சீரியலில் தற்போது ரொமான்ஸ் காட்சிகள் அதிகாரித்து வருவதால் தான் ரோஷ்னி விலகிவிட்டதாக கூறி வருகினறனர். கண்ணம்மா ரோலில் வினுஷா தேவி நடித்து வருவது ரசிகர்களை ஓரளவிற்கு திருப்திபடுத்தினாலும் ரோஷ்னி அளவுக்கு கவரவில்லை என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment