கண்மணி சீரியல் : உங்க ட்விஸ்டுக்கு அளவே இல்லையாப்பா...?
வளர்மதியை சைக்கோ என்பது போல காண்பித்து கடைசியில் பழிவாங்கும் வன்மம் குரோதம் நிறைஞ்ச கேரக்டரா டக்குன்னு திசை மாத்தி விட்டது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ரிலீஃபாகத்தான் இருக்கிறது.
Kanmani, Sun TV serial : கண்மணி சீரியலில் வளர்மதி தன் சுய ரூபத்தை காமிக்கும் தருணம் இருக்கே.. அடடா திக் திக்குன்னு ஆகிருச்சு. சினேகாவை காய் வாங்கிட்டு வான்னு சொல்லி கடைக்கு அனுப்பியது என்ன.. அம்மாவுடன் சேர்ந்து திட்டம் போட்டு, ஆகாஷ் சட்டை, ஆகாஷ் படத்தை சினேகா பேக்கில் வச்சுட்டு அவள் நடத்தையில் பழி போடுவது என்ன என்று காட்சிகள் செம விறுவிறுப்பு.
என்ன தைரியமா குரூரமா முகத்தை வச்சுக்கிட்டு கிருஷ்ணவேணியும், வளர்மதியும் செத்துப்போ செத்துப்போ என்று சினேகாவின் கழுத்தை நெறிப்பது கொடுமையான காட்சிகள். கண்மணி சீரியல் ஒரு மாதிரி இப்போது விறுவிறுப்பாக சென்றுக்கொண்டு இருக்கிறது. வளர்மதிக்கு முகத்தில் குரூர பாவம் நன்றாக வருகிறது. பாரத நாட்டிய டான்சராச்சே... முக பாவனையை நன்றாகவே மாற்றிக் காண்பிக்கிறார்.
நடிகர் சஞ்சீவ் சன் டிவிக்கு திருமதி செல்வத்துக்குப் பிறகு இந்த ஹிட் சீரியலை கொடுத்து வருகிறார். சீரியலுக்கு மெயின் பிளஸ் என்றால் அது சஞ்சீவ்.. அடுத்து பூர்ணிமா பாக்யராஜ் ரெண்டாவது பிளஸ். இருவருக்காகவும் பெண்கள் கண்மணி சீரியலை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
வளர்மதியை சைக்கோ என்பது போல காண்பித்து கடைசியில் பழிவாங்கும் வன்மம் குரோதம் நிறைஞ்ச கேரக்டரா டக்குன்னு திசை மாத்தி விட்டது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ரிலீஃபாகத்தான் இருக்கிறது. சினேகா அழகாக இருக்கிறார். பயந்த மாதிரி நடிப்பது இவரது முகத்துக்கு ரொம்ப ஈஸியா வருகிறது. என்னங்க இது.. ஆகாஷ் சிநேகாவைத் தேடிகிட்டு அலையறான். சினேகா ஆகாஷ்கிட்டே வளர் நல்லவ இல்லைன்னு சொல்லி உண்மையே அப்போதுதான் வெளியில தெரிய வருது.
அந்த நேரம் பார்த்து சினேகா ஆகாஷைப் பார்ப்பது நல்லதுதானே.. அவனை நேரில் பார்த்து நடந்ததை சொல்லவும், வளர்மதியின் அம்மாத்தான் சவுந்தர்யா அப்பாவை கொலை செய்தாங்க என்கிற உண்மையை சொல்லி, தன் மீது வளர்மதி வீணான பழி போட்டு வீட்டை விட்டு அடிச்சுது தள்ளி துரத்திட்டான்னு சொல்லவும் லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை எந்தப் பெண்ணாவது தவற விடுவாளா? சினேகா எதுக்கு ஆகாஷை பார்த்ததும் ஒளிஞ்சுக்கணும்? ஆடியன்ஸை வெறுப்பேத்தற மாதிரிதான் சீன் வைப்பீங்களா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"