நந்தினியா..? பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க! கலாய் வீடியோ

Myna Nanthini Yogesh : விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நந்தினி

Tamil Serial Actress Myna Nanthini and Yogesh : விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நந்தினி. அந்த தொடரின் மைனா கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்று அறியப்பட்ட இவர், வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து சீரியல் நடிகர் யோகேஷ்வரன் என்பவரை திருணம் செய்துகொண்ட நந்தினிக்கு தற்போது ஓரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு சீரியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் இவர், விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜீன்ஸ் நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டார். அப்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான நடனத்துடன் எண்ட்ரி கொடுத்து பார்வையாளர்களை அசத்தியுள்ளார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை பிரியா ராமன், நந்தினி மற்றும் யோகேஷ் இருவருக்கும் வரவேற்பு அளிக்கிறார். அடுத்து லாக்டவுனில் குழந்தை பிறந்த்து குறித்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு தனக்கு குழந்தை பிறந்தது குறித்து நந்தனி கூறுகிறார். அதன் பிறகு குழந்தை அம்மா மாதிரி இருக்கிறாதா அல்லது அப்பா மாதிரி அழகாக இருக்கிறதா என பிரியாராமன் கேட்கிறார். அதனைத் தொடர்ந்து, நந்தினி அவரது கணவர் யோகேஷ் மற்றும் அவர்களின் குழந்தை மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் திரையில் காண்பிக்கப்படுகிறது. அதனைப்பார்த்து அனைவரும் கைத்தட்டும் நிலையில், தொகுப்பாளர் பிரியாராமன், இது நந்தினியா? நான் நமிதான்னு நெனச்சேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news myna nanthini yogesh in jeens show

Next Story
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்vj chitra acts calls movie, calls movie, vj chitra, vj chitra, விஜே சித்ரா, கால்ஸ், கால்ஸ் திரைப்படம், விஜே சித்ரா, celebrities screening with tears, pandian stores chitra
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express