Tamil Serial News : விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒருசில சீரியல் களில் நடித்த அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஷ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரும் வரவேற்பை பெற்றார். 98-வது நாள் வரை பிக்பாஷ் வீட்டில் இருந்த அவர் அதன்பிறகு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் 4-ல் போட்டியாளராக நுழைந்த ஷிவானி தன்னுடன் பகல் நிலவு சீரியல் ஜோடி, நடிகர் அஸீம் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதனால் பகல்நிலவு சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், தற்போது நடிகர் அஸீம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “அனைவருக்கும் வணக்கம்! எங்கள் இரு தரப்பிலும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்! தயவுசெய்து எனது திருமண நிலை குறித்து எந்தவொரு தனிப்பட்ட கேள்விகளும் வேண்டாம்!” என பதிவிட்டு இருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Tamil serial news pagal nilavu serial actor officially announced
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை