Advertisment

ரியல் ரொமான்ஸ்: காதலியை இன்ஸ்டாவில் அறிமுகம் செய்த சீரியல் நடிகர்

Tamil Serial News : சீரியல் நடிகர் அவினாஷ் தனது காதலியை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
ரியல் ரொமான்ஸ்: காதலியை இன்ஸ்டாவில் அறிமுகம் செய்த சீரியல் நடிகர்

கொரோனா தொற்றுக்கு முன் சன்டிவியில் ஒளிப்பரப்பாகி இல்லத்தரசிகளிடம் நன்மதிப்பை பெற்ற சீரியல் அழகு. ரேவதி மற்றும் தலைவாசல் விஜய் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இந்த சீரியலில், இவர்களின் கடைசி மகன் திருநா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அவினாஷ். அந்த சீரியலின் மூலம் பிரபலமான அவர், தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் அம்மன் சீரியலில் அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

எப்போதும் சமூக வலைதளங்களில் தனது சுற்றுலா, புகைப்படங்கள் மற்றும் தான் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்கள் என அனைத்தையும் பதிவிட்டு வரும் அவினாஷ், தனது புகைப்படம் முதல் தான் பிரபலங்களுடன் எடுத்துக்கொள்ளும் போட்டோக்கள் வரை என தொடர்ந்து வலைதளங்களில் ஆக்டிவ்வாக பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது அவினாஷ் தனது காதலி தெரெசாவை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

publive-image

இந்த போட்டோக்கள் குறித்து அவினாஷ், தனது பதிவில், நான் இப்போது உன்னை நேசிப்பதை விட அதிகமாக நேசிக்க முடியாது என்று சத்தியம் செய்கிறேன், ஆனால் நாளை நான் இன்னும் அதிகமாக நேசிப்பேன் என்பது எனக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார். சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ள அவினாஷும் தெரெசாவும் பல ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும், தற்போது முதல் முறையாக இவர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment