Advertisment

அழகு சீரியல் : பூர்ணா வில்லியான தருணத்தை பாத்துருக்கீங்களா?

ரவி அத்தான்... ரவி அத்தான் என்று அழகம்மையின் மூத்த மகனை திருமணம் செய்துக்கொள்ள சுற்றி சுற்றி வந்தாள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Azhagu Serial sun tv, Tamil Serial News, Azhagu Sudha Poorna

Azhagu Serial sun tv

Sun TV, Azhagu Serial : அழகு சீரியலில் அழகம்மை சுதாவை முதல் மருமகளாக ஏற்றுக்கொள்ள, அந்த இடத்துக்கு வர வேண்டிய பூர்ணா இரண்டாவது மருமகள் ஸ்தானத்துக்கு வந்து விடுகிறாள். சரி.. அது போகட்டும் என்று விட்டுக்கொடுத்து அழகம்மை மருமகளாக வாழ நினைத்தாலும், இந்த ஆழகம்மை இருக்காங்களே அவங்க கொஞ்சம் ஓவராத்தான் போயிகிட்டு இருக்காங்க. ரவியின் நண்பன் சுரேந்திரனின் மனைவியை, அவன் இறந்த பிறகு காப்பாற்ற வேண்டும் என்று ரவி, சுதாவை கல்யாணம் செய்துக்கொண்டு வந்ததில் சுதாவின் தவறு ஒன்றும் இல்லை என்று அழகம்மை வாதிடுவது சாரி. சுதாவை மதிக்காதவங்க அது வசந்தவா இருந்தாலும் சரி...எனக்கு முக்கியம் இல்லைன்னு சொல்றாங்க.

Advertisment

சோகத்தில் ஏமி ஜாக்ஸன், புன்னகையுடன் மேகா ஆகாஷ் – படத் தொகுப்பு

அண்ணன் மகன் ரவி தனது பெண்ணை கல்யாணம் செய்துக்காம, சுதாவை கல்யாணம் செய்துகிட்டு வந்ததில் வருத்தமாக இருக்கும் வசந்தா, மறு வீட்டு விருந்துக்கு சுதாவும் ரவியும் வரக்கூடாது என்று சொல்ல, சுதாவை வேணாம்னு சொல்ற இடத்துக்கு நானும் வர மாட்டேன்னு சொல்றது கதைக்கு பொருந்தலை. என்ன இருந்தாலும் மகேஷ் ரெண்டாவது மகன் இல்லையா. அவனது மறு வீட்டு விருந்துக்கு சொந்த நாத்தனார் வீட்டுக்கு வர மாட்டேன்னு பிடிவாதமா இருக்காங்க அழகம்மை. கல்யாணத்துக்கு முதல் நாள் ராத்திரி வரைக்கும், பூர்ணா எனக்கு மருமகள் இல்லை, மகள் மாதிரின்னு அன்பா ஆதரவா பேசின அத்தை, திடீர்னு நேத்தைக்கு வந்த சுதாவை தூக்கி வச்சு பேசிகிட்டு, அவளுக்காக பூர்ணாவை சமமாக கூட பார்க்காமல் இரண்டாம் பட்சமா பார்க்கறது.

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள்: 15 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்டால் ரசிகர்கள் வாழ்த்து மழை!

இப்போது ஆதரவு அளித்து அரவணைச்சு பேச வேண்டியது பூர்ணாவுக்கு தானே? அவள்தானே ரவி அத்தான்... ரவி அத்தான் என்று அழகம்மையின் மூத்த மகனை திருமணம் செய்துக்கொள்ள சுற்றி சுற்றி வந்தாள். ரவியும் அவளை கல்யாணம் செய்துக்கத்தானே வாக்கு கொடுத்து இருந்தான். கல்யாண ஏற்பாடுகள் நடந்து, சுதாவை கல்யாணம் செய்துகிட்டான்னு வந்து நிக்கறப்போ பூர்ணா மனம் தானே சுக்கு நூறாக உடைந்து போயிருக்கும்! கண்டுக்காம அழகம்மை சுதா... சுதா... என்று சப்போர்ட் செய்ய... இதோ பூர்ணா கொஞ்சம் கொஞ்சமாக வில்லியாகும் தருணம் இப்போது தான் ஆரம்பிக்கிறது. போகப் போக சூப்பர் வில்லியாகறாங்க பாருங்க...!

 

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Sun Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment