டிக் டாக்கில் ரகளை செய்த ப்ரீத்தி: இப்போ இன்ஸ்டாவில் படு பிஸி!
திருமணம் சீரியலில் இருந்து வெளியேறி, சித்தி 2-வில் பிஸியானார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் டிக் டாக் மேலும் ப்ரீத்திக்கு தனி பிரியம் இருந்தது.
Tamil Serial News: சீரியலில் நடிக்கத் தொடங்கிய கொஞ்ச நாட்களிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த பெருமை ப்ரீத்தி ஷர்மாவையே சாரும். யாரிவர் என்ற கேள்வியே இங்கு தேவைப்படாது. காரணம் சித்தி 2 சீரியலில் வெண்பாவாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.
Advertisment
ட்ரெண்டி எத்னிக் லுக்கில் ப்ரீத்தி
தற்போது மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் தனது விதவிதமான படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ராதிகாவின் பாசத்திற்குறிய மகளாக, சித்தியின் மீது உயிரையே வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதன் முதலில் 'கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் நுழைந்தார் ப்ரீத்தி.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்தார். அந்த சீரியலில் இவர் அனிதா கேரக்டரில் நடித்திருந்தார். நவீனை உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக நடித்து இருந்ததால், நெட்டிசன்கள் மத்தியில் நவீன் - அனிதா ஜோடி பிரபலமாகியது. ஆனால் சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததால், தொடர்ந்து அவரால் திருமணம் சீரியலில் நடிக்க முடியவில்லை.
A post shared by प्रीति शर्मा (@preethi__sharma__official) on
அதனால் திருமணம் சீரியலில் இருந்து வெளியேறி, சித்தி 2-வில் பிஸியானார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் டிக் டாக் மேலும் ப்ரீத்திக்கு தனி பிரியம் இருந்தது. அதனால் வித விதமான டிக் டாக் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் பலமும் கூடியது. ஆனால் தற்போது யார் கண் பட்டதோ, டிக் டாக்கை தடை செய்து விட்டார்கள். அதனால் தனது விதவிதமான ஃபோட்டோக்களால் இன்ஸ்டாகிராமை நிரப்பி வருகிறார் ப்ரீத்தி ஷர்மா.
19 வயதாகும் இவர், காலேஜ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் அடிப்படையில் வட இந்தியப் பெண். சொந்த ஊர் லக்னோ. ஆனால் ப்ரீத்தியின் குடும்பம் கோயம்புத்தூரில் செட்டில் ஆகியிருக்கிறது. அப்பா, அம்மா, 2 தம்பிகள் என மகிழ்ச்சியாக இருக்கும் ப்ரீத்திக்கு வீட்டில் பயங்கர சப்போர்ட்டாம்.
ப்ரீத்தி ஷர்மா
பாடுவதில் மிகுந்த ஆர்வம் மிகுந்த ப்ரீத்தி, அதில் தான் தனது கரியர் இருக்க வேண்டும் என நினைத்தாராம். இப்போது அவரே எதிர்பார்க்காத வகையில், நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து பூரிப்படைகிறார். இருப்பினும் எதிர்காலத்தில் நல்ல பாடகியாக வர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறதாம்.
பள்ளி, கல்லூரி படிக்கும் போதே படு தைரியமான ஆளாக தனித்து தெரிந்தாராம் ப்ரீத்தி. ஆண்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு, அவர்களைப் போன்று பைக் ஓட்ட வேண்டும் என்பது அவரின் வெகுநாள் ஆசையாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”