சாக்லெட் : வர வர கொஞ்சம் புளிக்கிற மாதிரி இருக்கே…

இந்த ஸ்வீட்டை சாதாரண பேக்கரி வைத்து நடத்தி வரும் எளிய குடும்பத்து பெண்ணான இனியாவைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாதா?

Sun TV Chocolate Serial
Sun TV Chocolate tamil Serial, தமிழ் சீரியல், சன் டிவி, tamil serial news

Sun TV Serials : சாக்லேட் சீரியலில் இனியாவை விக்ரம் துரத்தி துரத்தி காதலிக்கிறான். விக்ரம் பெரிய பிசினெஸ் மேன்.. இவ்ளோ பெரிய பணக்காரன் கறுப்பான இனியாவை எதுக்கு காதலிக்கிறான்னு பார்த்தால், பேக்கரி வைத்து நடத்தும் இனியா குடும்பம் சாக்லேட் ஸ்வீட் தயாரிப்பதில் எக்ஸ்பர்ட். அதுவும் டபுள் தமாகா ஆஃபர் என்பது போல இனியாதான் அப்பாவுக்குப் பிறகு சாக்லேட்டில் சுவீட் பிளஸ் பிஸ்கட்ஸ் செய்வதில் கைத்தேர்ந்தவள்.

செம்பருத்தி : ஆதி, பார்வதி ரசிகர்கள இப்படி ஏங்க வைக்கலாமா?

விக்ரம் அப்பா பிசினெஸ் நஷ்டம் என்று சொல்லி தலைமறைவாகிடறார். பிஸினெஸில் 300 கோடி ரூபாய் கடன். அந்த கடனிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும். அதற்கு துருப்பு சீட்டாக கிடைக்கிறது இனியாவின் சாக்லேட் ஸ்வீட்ஸ் செய்யும் திறமை. இதனால்தான் சீரியலுக்கு சாக்லேட் என்று டைட்டில் வச்சு இருக்காங்கன்னு நினைத்தால் சாக்லேட் நிறத்தில் இருக்கும் இனியாவை பேஸ் பண்ணி பேர் வச்சு இருக்காங்க.

விக்ரம் காதலிச்ச பெண் பல்லவி… ஆனால், இனியாவை பொய்யா காதலிச்சு அவளை கல்யாணமும் செய்துக்கறான். சாக்லேட்ஸ் ஸ்வீட்ஸ் செய்யும் வழி முறையை கற்றுக்கொண்ட பின்னர் இனியாவை டிவோர்ஸ் செய்து அனுப்பிடலாம் என்று அம்மா, பல்லவி விக்ரம் மூன்று பேரும் திட்டம் போட்டு கல்யாணம் முடிந்துவிட்டது.

300 கோடி ரூபாய் கடன்.. வெறும் சாக்லேட்ஸ் ஸ்வீட்ஸ் செய்து, பிஸினெஸில் ஜெயித்துவிட முடியுமா? இந்த ஸ்வீட்டை சாதாரண பேக்கரி வைத்து நடத்தி வரும் எளிய குடும்பத்து பெண்ணான இனியாவைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாதா? சரி, நிறத்தை விட்டு விட்டு, சாதாரண குடும்பத்தை சேர்ந்த எளிய பெண் என்பதால் மட்டும் பணக்கார விக்ரம் காதலிக்கும்போது இனியா ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் என்று காண்பித்தால் கதை எடுபடாதா? அவளை காதலிக்க வைக்க விக்ரம் வேலைக்காரன் மாதிரி மாறு வேஷத்தில் போயி இனியா மனசை மாத்தி காதலிக்க வைக்கிறான்.

டெபிட் கார்டை மறந்துட்டீங்களா…? கவலைப்படாதீங்க… ஏ.டி.எம்-ல் பணம் எடுக்க வழி இருக்கு!

இது எல்லாமே எபிஸோட்ஸ் கணக்கு காண்பிப்பது போலத்தான் இருக்கிறதே தவிர, கதைக்கு சாத்தியமில்லை. கறுப்பு பெண் என்று எதற்கு இனியாவை காண்பிக்க வேண்டும்? கறுப்பு.. சிவப்பு என்பதை கதையில் திணிக்காமல் நிற பாகுபாடு இல்லாமல் பணக்காரர் ஏழை என்று வைத்து கதையை கொண்டு போயிருக்கலாம். விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி மாதிரி கறுப்பை பேஸ் செய்து சீரியலை எடுக்க வேண்டும் என்கிற மைன்ட்செட்டில் இப்படி ஒரு சீரியலை தயாரித்து வழங்கி வருகிறது சன் டிவி.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news sun tv chocolate serial vikram iniya

Next Story
செம்பருத்தி : ஆதி, பார்வதி ரசிகர்கள இப்படி ஏங்க வைக்கலாமா?Sembaruthi Serial, Aadhi Parvathi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com